Header Ads



நல்லாட்சி கொண்டு வந்த பைத்தியகாரத்தனமான, விசர்ப்பிடித்தவர்கள் உருவாக்கிய அரசியலமைப்பு

இலங்கையின் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் பைத்தியகாரத்தனமான அரசியலமைப்புச் சட்டம் எனவும் அதனை மாற்றியமைக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குருணாகலில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“ இந்த அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும். இது நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வந்த பைத்தியகாரத்தனமான அரசியலமைப்புச் சட்டம். இது விசர்ப்பிடித்தவர்கள் உருவாக்கிய விசர்த்தனமான அரசியலமைப்பு. இதுதான் உண்மையான கதை. இதனை மாற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவை. குருணாகல் மாவட்டத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று தர வேண்டும்” எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை பைத்தியகாரத்தனமான அரசியலமைப்புச் சட்டம் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விமர்சித்தாலும் அவர் உட்பட அவர் சார்ந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடனே இந்த திருத்தச் சட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் உட்பட முழு அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதாக கூறியே சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இந்த அரசியல் அமைப்பு சட்டம், அரசியல் வாதிகளின் ஏதாச்சதிகாரத்தை கட்டுப்படுத்தி மட்டுப்படுத்தி நிதானமான போக்கை அவர்கள் கடைப்பிடுத்து நீதியான,நியாயமான செயற்பாடுகளை எல்லா சமூகங்களுக்கும் இன, மத ,குல வேறுபாடின்றி வழங்கக்கூடிய முறையில் அமக்கப்பட்டதாகும்.ஆனால் துர்அதிஷ்டவசமாக அப்போதைய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளும்,அவர்களது கட்சியைச் சார்ந்தவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும்தான் இந்த அரசியல் அமைப்பு சட்டத்தை விமர்சிப்பதற்கு காரணமாகும்.இருந்தும் சாதாரண மக்களுக்கு இது ஒரு பிரச்சினையே அல்ல. ஆனால் அரசியல்வாதிகளுக்கு தான் நினைப்பதை, விரும்புவதை செய்ய முடியாமல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதே இதன் பிரதான குறைபாடாக அவர்களை பொறுத்தவரை கணிக்கப்படுகிறது.இங்கு இந்த அரசியல் சட்டத்தில் பாராளுமன்றத்துக்கும் ஜனாதிபதிக்குமுள்ள அதிகாரங்கள் சமமாக பகிரப்பட்டுள்ளன.ஒற்றுமையான ஒரே கட்சியைச் சேர்ந்த இவ்விருவரும் எதிர்வரும் அரசாங்கத்தில் அமையப் பெற்றால் மக்களுக்கு இந்த 19வது அரசியல் அமைப்பு திருத்தச்சட்டத்தைவிட வேறு சட்டங்கள் பயனளிக்கமாட்டாது என்பதுதான் நிதர்சனம்.

    ReplyDelete

Powered by Blogger.