Header Ads



மங்கள சமரவீர போன்றவர்கள், பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் - சுனில் ஹந்துன்நெத்தி

மங்கள சமரவீர போன்ற அரசியல்வாதிகள் தற்போதைய இலங்கை நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டிய நபர்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீர, இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் தீர்மானகரமான சந்தர்ப்பங்களில் மிக முக்கிய பங்காற்றிய நபர் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசியலில் விசேடமான முக்கிய தருணங்களில் சரியான தீர்மானங்களை எடுக்கும் நபர்களில் ஒரு சிலரே நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர்.

மங்கள சமரவீர அவர்களில் ஒருவர் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகியதாக அறிவித்துள்ளமை தொடர்பாக தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.