Header Ads



இனவெறியை ஒழிக்கக்கூடிய சக்தி, உண்டென்றால் அது இஸ்லாம் மட்டுமே


-Aashiq Ahamed-

இன்று, இனவெறி பிரச்சனைகளால் பற்றி எரிகிறது அமெரிக்கா. இதற்கான தீர்வை ஐம்பது வருடங்களுக்கு முன்பே சொன்னார் மால்கம் எக்ஸ். இனவெறியை ஒழிக்கக்கூடிய சக்தி ஒரு மார்க்கத்திற்கு உண்டென்றால் அது இஸ்லாம் மட்டுமே என்று தனக்கே உரிய தீர்க்கமான முறையில் கூறினார் எக்ஸ். ஏன் என்பதற்கும் சான்றுகளை கொடுத்தார் அவர். தன்னுடைய ஹஜ் பயணத்திற்கு பிறகு தன் மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு விவரிக்கிறார்.

"இதுநாள் வரை, இப்படியான உண்மையான விருந்தோம்பளையும், ஆழமான சகோதரத்துவத்தையும் நான் அனுபவித்ததில்லை. இங்கு பல்வேறு நிறத்தவரும் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பை கண்டு நான் வாயடைத்து போயுள்ளேன்.

அமெரிக்காவில் என்னுடைய அனுபவங்களை கொண்டு, வெள்ளையினத்தவரும் அது அல்லாதவர்களும் ஒன்றாக வாழவே முடியாது என்று நினைத்திருந்தேன். நீல நிற கண்களை கொண்டவரிலிருந்து கருப்பு நிற ஆப்பிரிக்கர் வரை, இங்கே ஆயிரக்கணக்கான மக்கள் உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் ஒன்றிணைந்திருக்கின்றனர். ஆனால் நாங்கள் ஒரே மாதிரியான சடங்குகளை செய்கின்றோம், சகோதரத்துவத்தை பிரதிபலிக்கின்றோம்.

அமெரிக்கா இஸ்லாமை புரிந்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. இனவெறி பிரச்சனைகளை ஒழிக்கக்கூடிய ஒரு மார்க்கம் உண்டென்றால் அது இஸ்லாம் மட்டுமே.

அமெரிக்காவாக இருந்திருந்தால் இவர்களை வெள்ளையர்கள் என்று கூறியிருந்திருப்பார்கள். அப்படியான மனிதர்களை நான் இங்கே சந்திக்கின்றேன், அவர்களுடன் பேசுகின்றேன், ஒன்றாக உணவருந்துகின்றேன். தாங்கள் வெள்ளையர் என்ற எண்ணம் இஸ்லாம் என்னும் வழிமுறையால் இவர்கள் மனதிலிருந்து அகற்றப்பட்டிருக்கின்றது.

என்னிடம் இருந்து இப்படியான வார்த்தைகள் வருவது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இந்த யாத்திரையில், நான் பார்த்தவைகளும் அனுபவித்தவைகளும் என்னுடைய முந்தைய முடிவுகளை மாற்றிக்கொள்ள வைத்திருக்கின்றன.

இது நாள் வரை இப்படியாக நான் கவுரவிக்கப்பட்டதில்லை. இது நாள் வரை இப்படியான எளிமையை உணர்ந்ததில்லை. ஒரு அமெரிக்க நீக்ரோவின் மீது இப்படியான அன்பு பொழியப்படும் என்பதை யார் தான் நம்புவார்?

எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...

Sincerely,
El-Hajj Malik El-Shabazz
(Malcolm X)"

4 comments:

  1. ஈழத்தவர்கள் எல்லோரையும் ஈகுவலாக நடத்தக் கூடிய ஆற்றலும் இஸ்லாத்துக்கே உள்ளது!

    ReplyDelete
  2. @abuwalid கம்யூனிசம் எனும் குப்பையில் எறியப்பட்ட சித்தாந்தத்தை இஸ்லாத்தைவிட சிறந்தது என்று ஒரு இஸ்லாமியனாக சொல்வதற்கு வாய் கூசவில்லையா? பொருளாதாரத்தை மட்டுமே வைத்து மனித வாழ்வு செழிப்பாகும் என்று கருதிய சில மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சித்தாந்தத்தை இறைவனால் மனிதர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமார்களை கொண்டு வாழ்ந்து காட்டி கற்றுத்தரப்பட்ட மார்க்கத்துடன் ஒப்பிடும் உங்களைப்போன்றவர்களின் அறிவை எண்ணி கவலை அடைகிறேன்.

    ReplyDelete
  3. @abuwalid கம்யூனிசம் எனும் குப்பையில் எறியப்பட்ட சித்தாந்தத்தை இஸ்லாத்தைவிட சிறந்தது என்று ஒரு இஸ்லாமியனாக சொல்வதற்கு வாய் கூசவில்லையா? பொருளாதாரத்தை மட்டுமே வைத்து மனித வாழ்வு செழிப்பாகும் என்று கருதிய சில மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சித்தாந்தத்தை இறைவனால் மனிதர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமார்களை கொண்டு வாழ்ந்து காட்டி கற்றுத்தரப்பட்ட மார்க்கத்துடன் ஒப்பிடும் உங்களைப்போன்றவர்களின் அறிவை எண்ணி கவலை அடைகிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.