Header Ads



சஜித் பிரேமதாச கலந்துக்கொள்ளவிருந்த வைபவத்தை நிறுத்திய தேர்தல் ஆணைக்குழு


ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் 37 லட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை கொல்கஸ்ஹோவிட்ட வேதெர வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்வதற்காக இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தை தேர்தல் ஆணைக்குழு தலையிட்டு நிறுத்தியுள்ளது.

இந்த வைத்தியசாலையில் குறைப்பாடாக காணப்பட்ட நோயாளிகளின் இருதயத்தை பரிசோதிக்கும் இயந்திரம் உட்பட மருத்துவ உபரகண தொகையை வழங்குவதற்காக சஜித் பிரேமதாச தலைமையில் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வைபவத்தில் முன்னாள் சுகாதார அமைச்சர் பீ. தயாரத்ன, மேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் லக்ஷ்மன் அபயகுணவர்தன, சட்டத்தரணியும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான எரந்த வெலியங்கே, ஹோமாகமை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரங்க அபேசிங்க, பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துக்கொள்ளவிருந்தனர்.

வைபவம் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாக இருந்ததுடன் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் வைபவம் நடைபெறவிருந்த இடத்திற்கு சென்ற, மொறட்டுவை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரம்மிந்து டி சில்வா உட்பட பொலிஸ் அதிகாரிகள், இந்த வைபவத்தை நிறுத்துமாறு தேர்தல் ஆணையாளர் தமக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறியுள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழு பொலிஸாருக்கு அனுப்பிய கடிதத்தை ஏற்பாட்டாளர்கள் கேட்கும்படி வாசித்து காட்டியுள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் வாதிகளில் பங்கேற்பின்றி குறித்த மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.