Header Ads



கருணா பல்டி அடிப்பு - ஊடகங்கள் தனதுரையை திரிவுபடுத்தி விட்டதாம்


  (அஸ்ரப் ஏ சமத்)

கருனா அம்மான் கடந்த வாரம்  காரைதீவு பிரதேசத்தில் தோ்தல் பிரச்சாரத்தின்போது  கோரோனாவில் இலங்கையில் 9 பேர் மட்டுமே இறந்தாா்கள் ஆனால் நான் ஒரே இரவில் விடுதலைப்புலிகள் உடன் இருக்கும்போது ஒரே இரவில் கிளிநொச்சியில் 2ஆயிரம் அல்லது 3ஆயிரம்  படையினா் கொன்றதாக தெரிவித்திருந்தாா். அவ் உரை சகல ஊடகங்களில் வெளிவந்திருந்தது.  சில பௌத்த மத குருமாா்கள் இவ்விடயம் சம்பந்தமாக உடன் கருனா அம்மாவை கைது செய்து விசாரிக்குமாறும் குற்றவியல் பிரிவினரிடம் முறையிட்டிருந்தனா்.  பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் இவ் விசாரனை நடைபெற்றது. 

அதற்கமைவாக இன்று 25ஆம் திகதி காலை 10.30மணிக்கு கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு  தனது சட்டத்தரனியுடன் வருகை தந்த கருணா அம்மான் 7 மணித்தியாலயங்களாக அவரை விசாரனைசெய்து  பதிவிட்டுள்ளது. 

இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரவித்த கருனா  ஊடகங்களே எனது உரையை திரிவு படுத்தி கூறியதாகவும் நான் ஒரு போதும் சிங்கள மக்களுக்கு ஆதரவானவன், அவா்கள் என்னை விரும்புவா்கள். நான் அன்று அந்த மேடையில்  நடந்தவற்றையே  இங்கு பதவிட்டுள்ளேன். எனது அரசியலை யாரும் தடுக்க முடியாது.   என அவா்  கருத்து தெரிவித்தாா்.

1 comment:

Powered by Blogger.