Header Ads



கிழக்கில் குழப்பதை ஏற்படுத்த, முயன்ற பயங்கரவாதி சஹ்ரான்

2014 ஆம் ஆண்டு அலுத்கம தர்கா நகரில் குழப்பநிலை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அவ்வாறான குழப்ப நிலையொன்றை கிழக்கு மாகாணத்தினுள் தோற்றுவிக்க சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் திட்டமிட்டிருந்ததாக உயர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்துள்ளது. 

2011 ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக செயற்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் என்ரூ லால் பெரேரா நேற்று (16) இரவு உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சி வழங்கியிருந்தார். 

இதன்போது சாட்டியம் வழங்கிய அவர், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் ஸ்தாபிக்கப்பட்டிருந்த விசேட புலனாய்வுப் பிரிவினர் ஊடாக அவ்வாறான நிலைமை உரிய வகையில் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். 

தான் பணிபுரிந்த குறித்த காலப்பகுதியில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களாக பூஜித் ஜயசுந்தர மற்றும் நந்தன முணசிங்க ஆகியவர்கள் செயற்பட்ட நிலையில் மாதம் ஒருமுறை இடம்பெற்ற புலனாய்வுத் தகவல்கள் மீளாய்வு கூட்டங்களில் அவர்கள் கலந்து கொண்டிருந்ததாக தெரிவித்தார். 

குறித்த காலகட்டத்தில் கிழக்கு மாகாண மக்களுக்கிடையே மாற்றங்களை காணக் கூடியதாக இருந்ததா? என குறித்த ஆணைக்குழு சாட்சியாளரிடம் வினவியது. 

அதற்கு பதிலளித்த அவர், காத்தான்குடி மற்றும் கிண்ணியா பகுதிகளில் அரேபிய மயமாக ஆரம்பித்த போதும் புலனாய்வு தரப்பினர் விரைவாக அது தொடர்பான தகவல்களை சேகரித்ததன் ஊடாக குறித்த செயற்பாடு தடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.