Header Ads



எனது வாழ்க்கையில் இதுதான், முக்கியமான சாதனை - பிரதமர் மகிந்த

விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியமையே எனது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான சாதனை என கருதுவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் எனக்கு முன்னர்

ஜனாதிபதிபதவிகளை வகித்தவர்கள் துணிச்சலான முடிவுகளை எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அச்சம் கொண்டிருந்தனர் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் வெளிநாட்டு அழுத்தங்களிற்கு அடிபணிந்தனர் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மூன்று வருடங்களிற்கு மேல் இந்த நாட்டை பாதித்து வந்த ஒரு சிக்கலை தீர்ப்பதற்கான அரசியல் உறுதிப்பாட்டினை என்னால் வழங்க முடிந்தது என்பது குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனது அரசியல் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பெரும் ஏமாற்றம் 2015 தேர்தலில் கிடைத்த தோல்வி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் வலுவான ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்காக எதிர்பார்த்துள்ளோம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அரசியல் சீர்திருத்தங்கள் அவசியமானவை அதற்கு எங்களிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.