Header Ads



வெட்டுக்கிளிகளின் தாக்ககத்தில் இருந்து, பயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை - ஆளுநர் முஸம்மில் தெரிவிப்பு


- இக்பால் அலி -

மாவத்தகமவுக்கு படையெடுத்துள்ள வெட்டுக்களின் தாக்ககத்தில் இருந்து பயிர் பச்சைகளைப் பாதுகாப்பதற்காக உயர்ந்த பூச்சி நாசினி வகைகள் மற்றும் இரசாயனங்களைப் பயன்படுத்தி கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளப்பட்டு வருவதாக வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் தெரிவித்தார்.

வெட்டுக்களிகள் படைடுத்துள்ள மாவத்தகம பிரதேசத்திலுள்ள கட்டுப்பிட்டிய எட்வட் தோட்டத்திற்கு இன்று (02) விஜயம் செய்த வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில்   வெட்டுக்கிளிகளின் தாக்கத்தினால்  பாதிக்கப்பட்ட வாழை மரம் மற்றும் தெங்கு பயிர்ச் செய்கைகளை நேரடியாகப் பார்வையிட்டபோது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதலளிக்கும் போது இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத் தெரிவிக்கையில்,

விவசாயிகளை அச்சுறுத்தி வரும் இந்த வெட்டுக் கிளிகளை முற்றாக இல்லாமற் செய்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக சகல ஏற்பாடுகளையும் விவசாய அமைச்சு மற்றும்  விவசாயத் திணைக்களத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இன்று விசேடமாக அதற்கான பூச்சி நாசினி விசிறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தெங்கு ஆராய்ச்சி நிலையத்தின் ஆதரவுடன்  பூச்சியல் வல்லுநர்கள், பயிர் வல்லுநர்கள், மற்றும் பிராந்திய விவசாய இயக்குனர்கள் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான தேவையான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.