June 12, 2020

ஒரு கறுப்பினத்தவர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வும், வரலாறும்


என் மூத்த சகலப்பாடி (என் மனைவியின் அக்கா கணவர்) பூர்வீகமாக ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர்.

90களின் கோர்ட்னி வால்ஷ், தற்கால கிரிஸ் கெய்ல் போன்ற கிரிக்கெட் வீரர்களின் பூர்வீகமான அதே ஜமைக்கா தான்.

என் சகலப்பாடியின் மூதாதையர்கள் இரண்டாம் உலக போருக்கு பின் இங்கிலாந்திற்க்கு குடிபெயர்ந்து வந்தவர்கள்.

இரண்டாம் உலகப் போரால் இங்கிலாந்தில் பலர் இறந்து விட்ட நிலையில், வேலை பார்க்க ஆட்கள் தேவைபட்டதால், தங்கள் ஆட்சியின் கீழ் இருந்த ஜமைக்கா நாட்டின் மக்களை 1948ல் இங்கிலாந்திற்க்கு அழைத்து கொண்டார்கள்.

ஆஸ்திரேலியாவில் இருந்து அட்லாண்டிக் கடல் வழியாக போர் வீரர்களை இங்கிலாந்திற்கு அழைத்து வந்த விண்ட்ரஷ் என்னும் கப்பலை, ஜமைக்காவில் நிறுத்தி ஏறக்குறைய 800 கறுப்பர் இன குடும்பங்களை இங்கிலாந்திற்கு அழைத்து வந்தனர்.

ஜமைக்காவில் வாழ்ந்து வந்த கறுப்பர் இன மக்கள் பூர்வீகமாக ஆப்ரிக்கா நாட்டை சார்ந்தவர்கள். குறிப்பாக மேற்கு ஆப்ரிக்கா நாடுகளை சார்ந்தவர்கள். தென் அமெரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஜமைக்காவை உட்படுத்திய மேற்கு தீவுகள் (வெஸ்ட் இண்டீஸ்) போன்ற நாடுகளில் கரும்பு மற்றும் பஞ்சு தோட்டங்களில் வேலை பார்க்க, 15 முதல் 19 நூற்றாண்டு வரை, ஆப்ரிக்காவில் இருந்து விலைக்கு வாங்கபட்டு, கொத்தடிமைகளாக விற்க்கபட்டவர்கள்.

அவர்களின் வம்சாவழியில் வந்தவர் தான் என் சகலப்பாடி. கிருஸ்துவத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்று கொண்டவுடன், முறையாக இஸ்லாமிய மார்கத்தை கற்று கொள்ள எகிப்து நாட்டுக்கு குடும்பத்துடன் ஏறக்குறைய 20 வருடத்திற்கு முன் புலம் பெயர்ந்தவர். இப்பொழுது அங்கேயே வாழ்ந்து வருபவர். அரபி புலமையும், குர்ஆன் ஹிஜாஸாவும் பெற்றவர். தன்னுடய இரண்டு சகோதரிகள் இஸ்லாத்தை தழுவ காரணமாயிருந்தவர். எனக்கு தெரிந்த வகையில் மிக நல்ல மனிதர்.

பெற்றோரை பார்ப்பதற்கு இங்கிலாந்து வருவார். இந்த வருடம் வந்தவரை கொரோனா லாக்டவ்ன் காரணத்தினால் சந்திக்க முடியவில்லை.

சந்தித்து கொண்டால் நேரம் போவதே தெரியாது. கறுப்பர் வரலாறு, அவர் இஸ்லாத்தை தழுவுவிய காரணிகள், இஸ்லாமிய கொள்கை, அரசியல் என்று பல விசயங்கள் பேசுவோம்.

நாங்கள் சந்தித்த ஆரம்ப காலத்தில் அவர் பகிர்ந்து கொண்ட செய்தி பல விசயங்களை தெளிவுபடுத்தியது.

"நிற வெறி காரணமாக மன உளைச்சலுக்கு உட்படுத்தப்பட்டேன்" என்றார். "கறுப்பராக இருக்கும் நீங்கள் நிற வெறி கொடுமை, மன உளைச்சலுக்கு உட்படுத்த படாமல் இருந்தால் தான் செய்தி" என்றேன். "என்னை மன உளைச்சலுக்கு உட்படுத்தியது கறுப்பர்கள்" என்றார். 

"கறுப்பர்களா?". "ஆம். வெளுத்த தோல் கொண்ட மாநிறமாக இருக்கும் கறுப்பர்கள், நான் இருண்ட கறுப்பு நிறத்தில் இருப்பதால் நிறத்தை சுட்டிகாட்டி மன உளைச்சலுக்கு உட்படுத்தினார்கள்" என்றார். அடக்க முடியாத சிரிப்பு தான் என் பதிலாக வந்தது. "கறுப்பில் கூடவா அரசியல்?" என்றேன். "மாநிறமாக இருக்கும் கறுப்பர்கள் எங்களை அடிமைகள் என்று அழைப்பார்கள். வெள்ளையர்களிடம் எங்களை பணத்திற்க்கும், ஆயுதங்களுக்கும் விற்றார்கள். அப்படித்தானே எங்கள் மூதாதயர் ஜமைக்கா, அமெரிக்காவிற்க்கும் அடிமையாக சென்றனர்." என்றார்.

நிற வெறிக்கு எதிராக பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். ஆனால் இஸ்லாத்தை ஏற்று கொண்ட பின் கிடைத்த மன நிம்மதி, சமத்துவ உணர்வை அதற்கு முன் அறவே உணர்ந்தில்லை என்று ஒரு முறை கூறினார்.

அவரும், அவரின் குடும்பமும் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைய துவா செய்யவும்.

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.

அல் குர்ஆன் 49:13

(படம்: 2019ல் லண்டன் திரும்பியவுடன் வீட்டுகாரம்மாவின் குடும்பத்தினர் அழைத்து விருந்து கொடுத்த பொழுது. பாசாகார பயலுக. குறிப்பா, என் நான்கு மச்சினன்மாறுவோ.)

Ajmal Khan Kudlebbai

1 கருத்துரைகள்:

அடிமைகள் விற்பதை முஹம்மது ஆதரித்தார்:


நூல்: புகாரி, எண்கள்: 2141, 2230, 2231, 2283


2141. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒருவர் தமக்குச் சொந்தமான அடிமை தம் மரணத்திற்குப் பின் விடுதலையாவார் என்று கூறியிருந்தார். அம்மனிதருக்குப் பொருள் தேவை ஏற்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அந்த அடிமையைப் பெற்று, 'இவரை என்னிடமிருந்து வாங்கிக் கொள்பவர் யார்?' என்று கேட்டார்கள். அவரை நுஅய்கி இப்னு அப்தில்லாஹ்(ரலி) இன்ன விலைக்கு வாங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள், அவரிடம் அந்த அடிமையைக் கொடுத்தார்கள்.

நூல்: புகாரி, எண்: 1463, 1464:


1463. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:


(குதிரைகளையும் அடிமைகளையும் பெற்றிருக்கும்) ஒரு முஸ்லிம் குதிரைகளுக்காகவும் அடிமைகளுக்காகவும் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை..' அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
https://www.bbc.com/tamil/global-53003369

Post a comment