Header Ads



பயணிகள் விமானமொன்றை சரக்கு விமானமாக, மாற்றியமைத்துள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

கொரோனா நோய் தொற்றையடுத்து உலகளாவிய பொருளாதாரத்துடன் நாட்டை தொடர்புபடுத்தும் வகையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதன் பயணிகள் விமானமொன்றை சரக்கு விமானமாக மாற்றியமைத்துள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட எயார் பஸ் 330 விமானம் நேற்று தூரக்கிழக்கு மற்றும் ஐரோப்பாவுக்கு அதன் செயற்பாட்டை ஆரம்பித்தது. விமானத்தின் மொத்த கொள்வனவான  170 கியூபிக் மீற்றரில், மேல் தட்டில் 60 கியூபிக் மீற்றரும் கீழ் தட்டில் 110 கியூபிக் மீற்றரிலும் மொத்தம் 45 மெட்ரிக் தொன் சரக்குகள் எடுத்துச் செல்லப்படும்.

ஸ்ரீலங்கள் எயார் லைன்ஸ் தற்போது வேறு சரக்கு விமானங்கள் மூலம் ஐரோப்பா, மத்திய கிழக்கு, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் தூரக் கிழக்கு வாடிக்கையாளர்களின் சரக்குகளை ஏற்றிச் செல்வது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.