Header Ads



முஸ்லிம்களின் காணிகளை கபளிகரம். செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது - முதல்வர் ஏ.எம்.ரக்கீப்

- எஸ்.எம்.எம்.முர்ஷித் -

எங்களை நாங்களே பாதுகாத்துக் கொண்டு எங்களுடைய இளைஞர்களுக்குவழிகாட்டிக் கொண்டு பிரச்சனைகளை மிக நாசூக்காக அனுக வேண்டிய காலம் வந்துள்ளது என கல்முனைமாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கீப் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில்பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபானை ஆதரித்து ஓட்டமாவடியிலுள்ள தலைமைக் காரியாலயத்தில்  இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- 

தமிழ், சிங்களம், முஸ்லிம் சகோதரர்கள் பயணித்தால்முஸ்லிம் சகோதரனை இறங்கி விசாரணை செய்கின்ற காலம் சஹ்ரானுக்கு பிற்பட்ட காலம். இலங்கையிலுள்ளஒவ்வொரு முஸ்லிம் சகோதரனையும் பார்த்து அவன் பயங்கரவாதியாக இருக்கக் கூடும் என்று பேரினவாதிகள்சத்தமிட்டு கூறும் நிலைமை இந்த நாட்டில் திட்டமிட்டு கூறும் நிலைமை உருவாகியுள்ளது. 

எங்களை நாங்களே பாதுகாத்துக் கொண்டு எங்களுடைய இளைஞர்களுக்குவழிகாட்டிக் கொண்டு பிரச்சனைகளை மிக நாசூக்காக அனுக வேண்டிய காலம் வந்துள்ளது. அம்பாறைமாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தும் பேரினவாதத்திற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கின்றோம். பொத்துவில்லில் நில அபகரிப்புக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.கிழக்கு தொல்பொருள் செயலணி என்று இந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

தொல் பொருள் திணைக்களத்திற்கு 1956ம் ஆண்டுகளில் 70 சதுரபரப்புள்ள ஏக்கர் காணிகள் கொடுக்கப்பட்டிருந்த போது 1965ம் ஆண்டுகளில் தொல் பொருள் திணைக்களத்திற்குமுப்பது ஏக்கர் காணிகள் தான் கொடுக்கப்பட்டது. சிங்கள மதகுருமார்களின் வழிகாட்டுதலின்கீழ் இந்த அரசாங்கம் எழுபது ஏக்கர் காணிகளை குறிப்பாக முஸ்லிம்கள் காலா காலம் குடியேறியுள்ளகாணிகளை கபளிகரம் செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதற்கு எதிராக போராட்டம்நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

 மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் முஸ்லிம்கள்சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இலங்கையைப் பொறுத்த வரையில்பெரும்பான்மை இனவாதிகள் எங்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்கின்ற நடவடிக்கையில் மிகதெளிவாக திட்டம் வகுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் சகோதரர்கள் எங்களுக்குஎதிராக எவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று உங்களுக்கு தெரியும். மட்டக்களப்புமாவட்டத்தினை பொறுத்த வரையில் சிங்கள பேரினவாதிகளிடம் இருந்து இந்த சமூகத்தினைபாதுகாக்க வேண்டிய தேவையும். எங்களது இருப்பை, காணியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் தெரிவு செய்யப்படும் எமது பாராளுமன்ற உறுப்பினருக்கு உள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எமது இருப்பை எவ்வாறு பாதுகாக்க போகின்றோம் என்ற போர்வையில் ஒவ்வொரு இளைஞனும் புறப்பட வேண்டும். முகைதீன் அப்துல்காதர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ஐந்து கிராம சேகவர் பிரிவுகள் கோறளைப்பற்றுமத்தியோடு சேர்க்கப்பட்டது. இதற்கு பதிலாக காணிகள் வழங்குவதாக கூறப்பட்டது. அவரும் மரணித்து விட்டார். அதற்கு பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக வந்தவர் ஏறத்தாழ பதினோழுவருடங்களாக ஆட்சி செய்கின்றார். கொடுக்கப்பட்ட கிராம சேகவர் பிரிவு காணிகள் வளமான காணிகளாக இருந்தது. வளமான நீரோட்டமாக இருந்தது. ஆனால் பதினோழு வருடங்களாக ஆட்சி செய்து முக்கிய பதவிகளில் இருந்தவர் ஏன் இதனை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. ஏன் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இவர்களால் முடியாத காரணமாகவா இருந்தது. 

அரசியல் ரீதியாக முடிவு காணப்பட வேண்டிய விடயம். இதற்கான காரணம்என்ன. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு வாக்குகளை பெற்றுக் கொடுத்தது கணேசமூர்த்திஎன்பவர். ஆனால் தற்போது அவர் இல்லை. ஐக்கிய தேசிய கட்சிக்கு இருக்கின்ற தமிழ்வாக்குகளை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தன்னுடையசுயநலத்திற்காக பறிகொடுக்கப்பட்ட காணிகளை இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களைமாத்திரம் தான் பெற்றுக் கொள்ள முடியும். அதில் மூன்று ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்புபெற்றுக் கொள்ளும். முஸ்லிம்களுக்கு ஆசனம் ஒன்று கிடைக்கும். அந்த ஆசனத்தினை பெறக் கூடியதகுதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மாத்திரம் தான் உள்ளது. இன்னொரு ஆசனத்தினைமுஸ்லிம் பெற்றுக் கொள்ள முடியும் என்றால் அது எதிர்காலத்தில் நடக்க முடியாத காரியம்.அதனை நோக்கி தமிழ் சகோதரர்கள் விழித்துக் கொண்டார்கள்.  மூன்று ஆசனங்களை தமிழர்;கள் பெறும் ஆசனத்தினை நான்காகஅதிகரித்துக் கொள்வதற்காக இளைஞர்கள் அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள். 

இம்முறைபிள்ளையானுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கலாம். அவ்வாறு ஐந்து பாராளுமன்றபிரதிநிதித்துவமும் பிரிக்கப்படுகின்றது. இங்குள்ள முன்னாள் அமைச்சர் எந்த முறையில்பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க போகின்றார்கள் என்ற புள்ளி விபரத்தினை எமக்கு தெரிவிக்க வேண்டும். 

இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் தொழில்வாய்ப்பு பணத்திற்கு விற்கப்பட்ட விடயங்கள் தெரியும்;. அவரின் கீழ் கிராமியமற்றும் மீன்பிடித் தொழில், விவசாயம், நீர்பாசன துறை இருந்தது. இந்தபிரதேசத்தில் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கி உள்ளார். இங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இல்லாத சமயத்திலும் குடிநீர் பிரச்சனை இங்குமாத்திரம் தான் தீர்க்கப்பட்டுள்ளது என்றார். 

ஓட்டமாவடி பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்எம்.எச்.எம்.அஸுஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோறளைப்பற்று வாழைச்சேனை மற்றும்ஓட்டமாவடி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள்,இளைஞர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். 

No comments

Powered by Blogger.