Header Ads



முஸ்லிம் சட்டத்தணிகள் தூங்குகிறார்களா...?

- அன்ஸிர் -


ஜனாதிபதி ஆணைக்குழு முன் தற்போது விசாரணைகள் சூடுபிடித்துள்ள நிலையில், பொதுபல சேனா சார்பில் ஞானசாரர், முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக சாட்சியம் வழங்கியுள்ளார்.

ஜப்னா முஸ்லிம் இணையம் அறிந்த வகையில், ஜனாதிபதி ஆணைக்குழு முன் கிறிஸ்த்தவ அமைப்புக்கள் சார்பில், விசாரணைகளின் போது ஒரு கிறிஸ்த்தவ சட்டத்தரணி ஆஜராகி வருகிறார்.

தேவையான வேளைகளில் அவர், தமது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கிறார்.

எனினும் இந்த விசாரணைகளின் போது, எந்தவொரு முஸ்லிம் சட்டத்தரணியும்,  ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் சார்பில் ஆஜராகவில்லை.

முஸ்லிம்கள் சார்பில் பொய் குற்றச்சாட்டுக்கள், ஆதாரமற்ற இட்டுக்கதைகள், பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டால், அதனை மறுத்தலிக்க முஸ்லிம்கள் சார்பில் அங்கு யாருமே இல்லை.

இந்நிலையில் முஸ்லிம் சட்டத்தரணிகள் ஏன், இதுகுறித்து ஆர்வமற்று இருக்கிறார்கள் என கேள்வி எழுகிறது.

இதுபற்றி நுஆ தலைவர் ஆசாத் சாலியிடம் கேட்டபோது, 

ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பமாகிய காலப்பகுதியிலேயே தாம் இதுபற்றி முஸ்லிம் சட்டத்தரணிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும், இதுபற்றி அவர்கள் கவனம் செலுத்தவில்லை எனவும் கவலை வெளியிட்டார்.

No comments

Powered by Blogger.