Header Ads



கருணாவையும், ஹரீனையும் கைது செய்யவேண்டும் - விமல் வீரவன்ஸ

“கருணா அம்மானின் அறிவிப்பை விடவும் ஹரின் பெர்ணான்டோவின் கருத்து மிகவும் பாரதூரமானது. இருவரும் கைதுசெய்யப்பட வேண்டும்.”

இவ்வாறு வலியுறுத்தினார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ.

“புனர்வாழ்வின் பின்னர் சமூகமயப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள், கடந்த காலங்களில் இழைத்த தவறுகள் தொடர்பில் தற்போது வீரவசனம் பேசினால் அவர்கள் நிச்சயம் கைதுசெய்யப்பட வேண்டும்” எனவும் அவர் மேலும் வலியுறுத்திக் கூறினார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கருணா அம்மான் விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“கருணாவின் கருத்தானது மிகவும் பாரதூரமான அறிவிப்பாகும். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த 14 ஆயிரம் பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டனர்.

பெரும்பாலும் சிங்கள மக்கள் மற்றும் இராணுவத்தினரை கொன்றவர்களே இவர்கள். இவர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூக மயப்படுத்தியது தவறு கிடையாது.

ஆனால், இவ்வாறு புனர்வாழ்வுபெற்று சென்றவர் மேடையேறி, இவ்வளவு இராணுவத்தினர், இவ்வளவு சிங்கள மக்கள், இவ்வளவு பிக்குகளைக் கொன்றேன் எனக் கூறினால் அந்நபரைக் கைதுசெய்ய வேண்டும்.

அவரிடம் விசாரணை நடத்தப்படவேண்டும். அவரால் இவ்வாறு கூறமுடியாது. தவறிழைத்திருக்கலாம். ஆனால், அதனை வீரதீரச்செயல் என தற்போது அறிவிக்கமுடியாது.

அதற்கு நிகரானதொரு தவறையே கருணா அம்மான் செய்துள்ளார். கருணா அம்மானைப் பாதுகாப்பதற்கு நான் முற்படவில்லை. சி.ஐ.டியினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் கருணா அம்மானின் அறிவிப்பை விடவும் ஹரின் பெர்ணான்டோவின் கருத்து மிகவும் பாரதூரமானது. இருவரும் கைதுசெய்யப்பட வேண்டும்” - என்றார்.

2 comments:

  1. Iwanda naaakka check pannanum.....
    Eppudiyellaam solli perumpaanmay makkala muttalaakkuraan....

    ReplyDelete
  2. பொஹோட்டுவ சார்பாக நடிக்கும் நாடகத்தின் மற்றொரு கட்டத்தைத்தான் இந்த பூருவன்ஸ இப்போது நடிக்கின்றார். இந்த திட்டமிடப்பட்ட நாடகம் பெரும்பான்மையினரின் வாக்குகளைக் கொள்ளையடிப்பதை மையமாகக் கொண்டது என்பதை இந்த நாட்டு மக்கள் எப்போது விளங்கிக் கொள்வார்கள் என்பது தான் பிரச்சினை.

    ReplyDelete

Powered by Blogger.