Header Ads



முஸ்லீம் வாக்காளர்களே,, முஸ்லீம் பிரதிநிதித்துவம் குறைந்துபோக துணை நிற்காதீர்கள்...!

- M Haniffa N Hassan -


மாகாணத்துக்கு  அடுத்து அதிகமான  முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும்  மாவட்டங்களாக கொழும்பு  மற்றும் கண்டி மாவட்டங்கள் உள்ளன. 

2010ம் ஆண்டு பொதுத்தேர்தலில்  கண்டி  மாவட்ட முஸ்லீம் மக்கள்  மிகவும் சரியான  முறையில் வாக்களித்து  3 முஸ்லீம் உறுப்பினர்களை  தெரிவு செய்தார்கள்,  ஆனால் அதை விட அதிகமான முஸ்லீம் சனத்தொகையை  கொண்ட கொழும்பு  மாவட்டத்தில்  ஒரு முஸ்லீம்  உறுப்பினர்  (Fowzie MP ) மாத்திரமே  தெரிவு செய்யப்பட்டார்,  அதில்  கணிசமான  பெரும்பான்மை இனத்தவர்களின்  வாக்குகள்  அவருக்கு  (UPFA) மூலம்  கிடைத்தது என்பதை  மறுக்க முடியாது (தற்போது உள்ள நாட்டின்  நிலைமையில் அது இனிமேல் சாத்தியம் இல்லை )

அதற்கு 3 காரணங்கள் இருந்தன 
a)அதிகமான  முஸ்லிம்கள் அலட்சியம் காரணமாக  வாக்களிக்கவில்லை 
b)முஸ்லிம்களின் கணிசமான  வாக்குகள் பெரும்பான்மை  இனத்தர்களுக்கு  சென்றது 
c)சுயேச்சை குழுக்களுக்கு  வாக்களித்து தமது வாக்குகளை வீணடித்தார்கள் 

அதனால் முக்கிய எதிர்க்கட்சியில் (UNP) போட்டியிட்ட மூன்று முஸ்லீம்  வேட்பாளர்களும் ஆளும் தரப்பில்  போட்டியிட்ட மற்றுமொரு  முஸ்லீம் வேட்பாளரும் தோல்வியை தழுவினார்கள்.

எனவே  வரலாற்று  நமக்கு  பாடமாக அமையட்டும்,  முஸ்லிம்கள்  தமது  வாக்குகளை  தவறாமல் இந்த தேர்தலில் பதிவு செய்ய வேண்டும். 

சரியான முறையில்  வாக்குகளை  அளித்தால்  2 பிரதான  கட்சிகளின் மூலம் கொழும்பு மாவட்டத்தில்  4 முதல் 5 முஸ்லீம் உறுப்பினர்களை  பாராளுமன்றத்துக்கு  அனுப்ப முடியும் என்பதை  நினைவில்  வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும்  குறிப்பிட்ட அளவு முஸ்லிம்கள் வாழும்  களுத்துறை,  கம்பஹா,  கேகாலை,  குருநாகல், காலி, அனுராதபுர, புத்தளம்  போன்ற மாவட்டங்களில்  முஸ்லிம்கள் தலா ஒன்று அல்லது 2முஸ்லீம் வேட்பாளர்களை தெரிவு செய்ய முடியும்.

கிழக்கு மாகாணத்தை பொறுத்த மட்டில் முஸ்லீம் வேட்ப்பாளர்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது, இதை நாம்   மிகவும்  பாதகமான நிலையில் உள்ளதாக நோக்க வேண்டும்.

குறிப்பாக UNP யின் பிளவு, அதிகமான சுயேட்சை குழுக்களின் வரவு  முஸ்லீம் பாராளுமன்ற  உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு பாதகமாக அமையும் என அச்சம் நிலவுகிறது!
அதுபோல தயவு ஒருவர் மற்ற முஸ்லீம்  வேட்பாளர்களை தூற்றி வாக்குகளை பெற நினைக்கவேண்டாம்.

மாற்றம் தேவை  இது மாற்றத்துக்கான தருணம் இல்லை,  இருப்பதை தக்க வைத்துக்கொள்ள  வேண்டிய காலம் இது !

சிந்தித்து வாக்களிப்போம் ! சமூகத்துக்காக ஒன்றுபடுவோம்!

No comments

Powered by Blogger.