Header Ads



மங்கள சமரவீர போட்டியில் இருந்து விலகியது, எமக்கு கிடைத்த ஆசீர்வாதம் - பொன்சேகா

இராணுவத்தில் கடமையாற்றிய தனக்கு மக்களின் நாடித்துடிப்பை அறிய 10 வருடங்கள் சென்றதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இநத ஜென்மத்தில் மக்களின் நாடித்துடிப்பை அறிய முடியாது எனவும் முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மீரிகமை தவலம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இராணுவத்தில் இருந்த எனக்கு மக்களின் நாடித்துடிப்பை அறிய 10 ஆண்டுகள் ஆனது. இராணுவத்தில் இருபது வருடங்கள், அமெரிக்காவில் 15 வருடங்கள், பாதுகாப்பு செயலாளராக குளிரூட்டிய அறையில் 10 வருடங்கள் கழித்த கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த ஜென்மத்தில் மக்களின் நாடித்துடிப்பை அறிய முடியாது.

கொரோனா காரணமாக உரிய நேரத்தில் தேர்தலை நடத்த முடியாது போனதால், நாடாளுமன்றத்தை கூட்டும் கடமை இருந்தது. மக்களின் நாடித்துடிப்பை அறியாத காரணத்தினாலேயே ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கூட்டவில்லை.

தற்போது சிறைச்சாலைகளை சுத்தப்படுத்த முயற்சித்து வருகிறார். பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் ஏன் அதனை செய்யவில்லை.

சிறைச்சாலைகளை சுத்தப்படுத்த வேண்டிய தேவை இருக்குமாயின் நான் கழித்து வைத்துள்ள மூன்று சிறைச்சாலை ஆடைகள் உள்ளன, அவற்றை அணிந்து சென்று மூன்று வாரங்கள் சிறையில் இருந்தால், போதைப் பொருள் விநியோகிக்கப்படும் விதத்தை பார்க்க முடியும்.

மங்கள சமரவீர போட்டியில் இருந்து விலகியதை எமக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருத முடியும். அவர் உட்பட சிலர் விலகிச் சென்றனர் என்பதால், எமக்கு எந்த நஷ்டமும் ஏற்பட போவதில்லை எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. THOLVI NICHAYAM ENRU PINVAANGIYA MANGALA SAMARAWEERA, NATIONAL LIST M P YAAKA NIYAMIKKAPADUVAR.
    AANAL AUGUST 5 AM THIKATHI MUTHAL,
    TELEPHONE, DISCONNECT PANNAPADUM.

    KANAGATUI. OBA EMATHU ANKAYA, SADAAKALIKA VISANDIKARA ETHA.

    ReplyDelete

Powered by Blogger.