Header Ads



*ஜும்ஆ தொழுகை விஷேட வழிகாட்டல்*






1) இலங்கையின் சுகாதார அமைச்சும் பள்ளிவாயல்களுக்கு பொறுப்பான வக்பு சபையும் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை பள்ளிவாயல் நிர்வாகங்களும் ஊழியர்களும் ஊர் மக்களும் முழுமையாக கடைபிடித்தல்.

2) ஜும்ஆ வழிபாடுகளில் கலந்து கொள்வோர் குறித்த மஹல்லாவைச் சேர்ந்தவர்களாக இருப்பதை பள்ளிவாயல் நிர்வாகிகள் உறுதி செய்து கொள்ளல்.

3) அதான் கூறுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு ஜும்ஆ நடைபெறும் இடத்துக்கு சமூகமளித்தல்.

4) ஐங்கால தொழுகைகளில் பேணப்பட்டு வந்த அதே வழிமுறைகளை பின்பற்றி ஜும்ஆவுக்கு வருவோரை உள்வாங்குதல்.

5) ஜும்ஆவுடைய அனைத்து வழிபாடுகளும் நிறைவுறும் வரை இமாம் உட்பட குத்பாவுக்கு வந்துள்ள அனைவரும்  முகக்கவசத்தை(MASK) அணிந்தருத்தல்.

7) சமூக இடைவெளி பேணி ஜும்ஆ வழிபாடுகளில் ஈடுபடுதல்.

7) ஜும்ஆவுக்கு சமூகமளிக்காதவர்கள் லுஹர் தொழுகையை தத்தமது வீடுகளிலேயே தொழுது கொள்ளுமாறு அதானுடைய இறுதியில் அறிவிப்பு செய்தல்.

8) ஜும்ஆ குத்பாவையும் தொழுகையையும் 25 நிமிடங்களுக்குள் சுருக்கிக் கொள்ளல்.

9) ஜும்ஆ குத்பாவில் பள்ளிவாயல்களின் பெறுமதி பற்றியும் அங்கே நடைபெறும் வழிபாடுகளின் சிறப்பு பற்றியும் எடுத்துரைத்தல்.

10) மிகக் குறைந்த ஒலியுடன்  ஒலிபெருக்கியை பயன்படுத்தி குத்பா உரையை நிகழ்த்துதல்.

11) ஜும்ஆ குத்பாவை உருக்கமான பிரார்த்தனையுடன் நிறைவு செய்தல்.

No comments

Powered by Blogger.