Header Ads



இனவெறியால் நானும் பாதிக்கப்பட்டேன் - கிறிஸ்கெய்ல்


அமெரிக்காவில் கருப்பினத்தவர் பொலிசாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கிறிஸ் கெய்ல் உருக்கமாக பேசியுள்ளார்.

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரத்தில் கடந்த வாரம் ஜார்ஜ் ஃப்ராய்ட் என்ற கருப்பினத்தவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து அமெரிக்காவில் உள்ள கருப்பினத்தவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து அவரது இறப்புக்கு நீதி கேட்டு அந்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், மற்றவர்களின் வாழ்க்கையை போலவே கருப்பினத்தவர்களின் வாழ்க்கையும் முக்கியமானது. கருப்பின மக்களை முட்டாள்களாக சித்தரிப்பதை நிறுத்துங்கள், கருப்பின மக்களும் புத்திசாலிகளாக உள்ளனர்.

நான் உலகம் முழுவதும் பயணித்துள்ளேன். அங்கு இன ரீதியாக பல்வேறு விமர்சனங்களை நான் சந்தித்துள்ளேன். இனவெறி என்பது கால்பந்தில் மட்டும் அல்ல, அது கிரிக்கெட்டிலும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. உலகில் உள்ள பல மதங்கள் அதை நிறுவியவரின் பெயரைத் தாங்கி செயல்படுகின்றன. இன்னும் சில மதங்களுக்கு அது எந்தச் சமுதாயத்தில் தோன்றியதோ அந்தச் சமுதாயத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாம் மார்க்கம் ஒரு குறிப்பிட்ட மனிதருடனோ அல்லது ஒரு தனிப்பட்ட சமுதாயத்துடனோ தொடர்புடையதல்ல. பொதுவாக மனித குலம் முழுமைக்கும் இறைவன் (அல்லாஹ்) தேர்ந்தெடுத்த மார்க்கம் இஸ்லாம் ஆகும். இது எல்லா மொழியினருக்கும் எல்லாச் சமுதாயத்திற்கும் பொருத்தமானது; பொதுவானது.

    ஈமான் (இறை நம்பிக்கை), தொழுகை, நோன்பு, ஜகாத் (கட்டாயக் கொடை), ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகள் கொண்ட மார்க்கம், இஸ்லாம்.

    “லா இலாஹ இல்லல்லாஹ், முகம்மதுர் ரசூலுல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை- அல்லாஹ்வைத் தவிர! முகமது நபி அவனுடைய திருத்தூதர்) என்ற ‘கலிமா’வை சொன்னவுடன், அவர் முஸ்லிம் ஆகி விடு கிறார் என்பது மட்டுமல்ல; அவர் சமத்துவ பாதையில் நடைபோடத் தொடங்குகிறார். உயர்ந்தவர் தாழ்ந்தவர், ஏழை பணக்காரர் என்ற பாகுபாட்டைக் களைகின்ற களமாக தொழுகை அமைந்துள்ளது. நோன்பு திறக்கும்போது பணக்காரரும், ஏழையும் பாகுபாடின்றி கஞ்சி அருந்துவது சமத்துவத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது. ‘ஜகாத்’ என்கிற கட்டாயக் கொடை சமுதாயத்தில் நிலவும் பொருளாதார பாகுபாட்டைப் போக்குகிற வழிமுறையாக உள்ளது. நாடு, மொழி, நிறத்தால் வேறுபட்ட லட்சக்கணக்கான மக்கள், ஒரே உடையில், ஒரே குரலில் ஒரே சிந்தனையில் சந்திக்கும் சமத்துவ மாநாடு, ஹஜ். இப்படி இஸ்லாம் கூறும் ஐந்து கடமைகளின் செயல்பாடுகளை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், அவற்றின் பின்னணியில் ‘சமத்துவம்’ பின்னிப் பிணைந் திருப்பதைப் பார்க்க முடிகிறது.
    Source: dailythanthi

    ReplyDelete

Powered by Blogger.