Header Ads



ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார் இலங்கை மாணவி


– அஹமட் –

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நுஹா, பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பை நிறைவு செய்து, தனது பிரதேசத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல். அன்சார் – மருதமுனையைச் சேர்ந்த எம்.எம். ஐனுல் றமீதா ஆகியோரின் மூத்த புதல்வியான நுஹா, இவ்வாறு மருத்துவப் பட்டம் பெற்றுள்ளார்.

இவரின் தாய் – தந்தை இருவரும் தாதியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைப் பருவத்திலிருந்து குடும்பத்தினருடன் பிரித்தானியாவில் வசித்து வரும் நுஹா, தனது பாடசாலைக் கல்வியை பிரித்தானியா – பேமிங்ஹாமிலுள்ள கிங் எட்வர்ட் VI ஹேண்ட்ஸ்வொர்த் பெண்கள் பாடசாலையில் (King Edward VI Handsworth School) பெற்றார். இது இங்கிலாந்திலுள்ள சிறந்த பாடசாலைகளில் ஒன்றாகும்.

பின்னர் ஒக்ஸ்ஃபோட் பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவப் பட்டப் படிப்பை 06 வருடங்கள் மேற்கொண்ட இவர், தற்போது அதனை நிறைவு செய்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் – ஒக்ஸ்ஃபோட் இல் உள்ள, ‘ஜோன் ராட்க்ளிஃப்’ வைத்தியசாலையில் (Oxford John Radcliffe Hospital) தனது முதல் நியமனத்தை பெற்று, இவர் கடமையாற்றி வருகிறார்.

2 comments:

Powered by Blogger.