Header Ads



நியுசிலாந்தில் இந்திய மாணவர் படுகொலை - சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

- நியுசிலாந்தில் இருந்து சர்தார் ஜமீல் -

கடந்த வியாழக்கிழமை "நோர்த்ஷோர்" பகுதியில் கொல்லப்பட்ட 26 வயதுடைய இந்திய மாணவரை கொலை செய்ததற்கான குற்றச்சாட்டின் பேரில் 37 வயது நபர் மீது போலீசார் கொலைக் குற்றச்சாட்டுகளை சுமத்தி கைது செய்துள்ளனர்.

ஜூன் 4, வியாழக்கிழமை, மாலை 5:30 மணியளவில் நார்த்கோட்டில், அகோரங்கா டிரைவில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட அசாதரண சூழ் நிலையை தொடர்ந்து தளத்துக்கு போலீசார் அழைக்கப்பட்டனர்.

அங்கு இரண்டு நபர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தனர், அவர்களில் ஒருவர் பொலிசார் அந்த இடத்தை அடையும் போதே உயிருக்காக போராடிக்கொண்டிருந்தார். மற்றும் ஒரு நபருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தது,. அங்கு இருந்த மூன்றாவது நபர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறந்தவரின் அடையாளம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை, ஆனாலும் அவரது நெருங்கிய உறவினர்களுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இறந்தவர் ஆக்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (AUT) கல்வி கற்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்திற்கு வந்த இந்திய சர்வதேச மாணவர் என்பது நம்பகமான தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து 37 வயது நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட காயங்கள் தொடர்பாக மேலும் அவர் குற்றச்சாட்டை எதிர்கொள்ள நேரிடும் என்றும் வைட்டமாடா சி.ஐ.பி.யின் ஆய்வாளர் ஆரோன் புரோக்டர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தின் முன் இருப்பதால், பொலிஸால் மேலும் கருத்து தெரிவிக்க முடியவில்லை" என்று துப்பறியும் ஆய்வாளர் புரோக்டர் நம் தமிழுக்கு தெரிவித்தார்

No comments

Powered by Blogger.