Header Ads



தமிழ் - முஸ்லிம் மக்களின் முழுமையான ஆதரவு பொதுஜன பெரமுனவுக்கு அவசியம் - காமினி லொகுகே

(இராஜதுரை ஹஷான்)

சகல இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தினால் மாத்திரமே  தேசிய  நல்லிணக்கத்தை  கட்டியெழுப்ப முடியும். எனவே தமிழ்- முஸ்லிம் மக்கள்   பொதுஜன பெரமுனவிற்கு முழுமையான ஆதரவு  வழங்குவது  அவசியமாகும் என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே  தெரிவித்தார்.

  நிகழ்கால அரசியல் நிலவரம் தொடர்பில்  வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

  இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் - முஸ்லிம்  சமூகத்தினர்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு  வழங்கவில்லை.     தமிழ்  மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் சுய  இலாபத்திற்காக   ராஜபக்ஷர்களுக்கு எதிரான  அரசியல்  பிரச்சாரங்களை  ஆரம்பத்தில் இருந்து முன்னெடுத்தார்கள். வடக்கில் தமிழ் தேசிய  கூட்டமைப்பு , கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் தவறான சித்தரிப்புக்களையே  இன்றும்  அரசாங்கத்துக்கு   எதிராக   முன்னெடுக்கிறார்கள்.

ஜனாதிபதி   அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும்  தலைவராகவே  செயற்படுகிறார்.   அரசியல் கட்சிகளை  இலக்காக  கொண்டு அவர் செயற்படவில்லை.   தமிழ் - முஸ்லிம் மக்கள்   பாரம்பரியமாக  முன்வைக்கும்குற்றச்சாட்டுக்களை விடுத்து யாதார்த்த நிலைமையினை புரிந்துக் கொண்டு  சிறந்த   அரசாங்கத்தை  உருவாக்க  ஒன்றுப்பட வேண்டும் என்பதே    அவரது நிலைப்பாடாக உள்ளது.

இடம் பெறவுள்ள  பொதுத்தேர்தலில்    பொதுஜன  பெரமுன  பலமான அரசாங்கத்தை  தோற்றுவிக்கும்  தமிழ் , முஸ்லிம் சமூகத்தினர் இடம் பொதுஜன பெரமுனவின்  மொட்டு  சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். பாராளுமன்றத்தில்   அனைத்து இன மக்களையும்  பிரதிநிதித்தவப்படுத்தும்  அரசாங்கம்   தோற்றம் பெற்றால் மாத்திரமே   தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும் என்றார்.

2 comments:

  1. முன்னாள் அமைச்சரும் பா உறுப்பினருமான காமினி லொக்குகே ஐயா அவரகளின் கருத்து மிக மதிக்கப்படவேண்டியதாகும் ஆனால் அவரகளின் இக்கருத்து அவரகளுடைய வாயில் இருந்து வந்ததா அல்லது இதயத்தில் இருந்து வந்ததh என்பதில் தெளிவில்லை. பொதுஜன பெரமுனவும் சுதந்திர கூட்டமைப்பும் ஒன்று சேர்ந்ததன் பின்னர் வேண்டுமென்றே முஸ்லிம் வேட்பாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்ட பிரபல்யமான முஸ்லிம் தலைவரகள் கிழக்கு மாகாணத்தின் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு தகுதியற்ற மக்கள் செல்வாக்கற்ற வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இது எந்தவகையில் நியாயம். பொது பெரமுன ஆட்சியமைத்தால் அதில் எந்த முஸ்லிமும் 100மூ தெரிவு செய்யப்படமாட்டாரகள் என்பது நிச்சயம். mg;gbj;jhd; nghJnguKdtpd; jpl;lk; ,Uf;fpdwJ. அப்போது எப்படி இவரகளால் சொல்லப்படுகின்ற சமூக நல்லிணக்கம் தேசப்பற்று மத இணக்கம் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். பொதுஜன பெரமுனவில் போடடிக்கு நிறுத்தப்பட்டுள்ள முஸ்லிம் வேட்பாளர்களுல் எவருக்கு மக்கள் செல்வாக்கு இருக்கின்றது. போடுகத்தை என்று சொல்வார்கள். அவரகள்தான் இவரகள்.

    Former Minister and Parliamentarian Gamini Lokuke, and for his opinion he has to be highly respected but it is not clear whether his comment came from his mouth or from the heart. After the merger of the Peoples Alliance and the UPFA, popular Muslim leaders, who were deliberately named as Muslim candidates, were removed from the Eastern Province's nomination list and the incompetent and unpopular candidates were selected. Which is not fair. It is certain that no Muslim candidates will be elected from Pothu Peramuna. So how can expect so-called social harmony, then, promote patriotic religious harmony and national reconciliation? Any of the Muslim candidates who have been put up for the PA will have popular influence.

    ReplyDelete
  2. எதுவரை எரிப்பீர்களோ ஜனாஸாக்களை,
    அதுவரை எதிர்பார்க்காதீர் வாக்குகளை.

    ReplyDelete

Powered by Blogger.