Header Ads



வரலாற்று சிறப்புமிக்க கற்பிட்டியின் தேவைகளை நிறுவேற்றுவேன் - ஆப்தின் எஹ்யா


கல்பிட்டி மக்களின் அபிலாசைகள்  பிரச்சினைகள் நிறைவேற்றப்படும்.  வரலாற்று சிறப்புமிக்க பிரதேசமாக கற்பிட்டி  திகழ்கின்றது. இப்பிரதேசத்தில் பல ஆயிரக்கணக்கான மூவின மக்கள் இன  ஒற்றுமையாகவும் , பல்லின  சமூகமாகவும் வாழ்கின்றனர். இம்மக்கள் கடல் சார்ந்த தொழிலிலே ஜீவனோபாயத்தை வாழ்க்கையாக கொண்டுள்ளனர். 

மீனவர் சமூகத்தின் பிரச்சினை , வாழ்வியல் மேம்பாடு திட்டங்கள் , சுகாதார அமைப்பு , கல்வி மேம்பாடு , இளைஞர் , யுவதி வேலைவாய்ப்பு விடயங்கள் இப்பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஊடாக நிறைவேற்றப்படும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தின் எஹ்யா கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் அக்மல் தலைமையில் நடைப்பெற்ற மக்கள் பிரசாரத்தில் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.