Header Ads



ரிஸ்வி முப்தியினதும், உமர்தீன் மௌலவியினதும் மானத்துடனும் விளையாடாதீர்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹ். 

புகைப்படம் ஒன்று தொடர்பில் உண்மைக்கு புறம்பானதும் இட்டுக்கட்டப்பட்டு சோடிக்கப்பட்டதுமாகும் என்பதை மிகுந்த மன வேதனையுடன் அறியத் தருகின்றேன். 

நேற்றைய தினம் 17.06.2020 இரவு சுமார் 10:00 மணியளவில் மொளலவி எச். உமர்தீன் ஆகிய நானும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முஃப்தி அவர்களும், எமது கண்டி மாவட்டம் சம்பந்தமாக ஏலவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்டோம். இந்நிகழ்வை நானும் சேர்ந்து ஏற்பாடு செய்தவர் என்ற அடிப்படையில் முஃப்தி அவர்களையும் நான் தான் அழைத்து சென்றேன்.  அப்போது  , அங்கு எடுக்கப்பட்ட ஒரு போட்டோவை சோடித்து  யாரோ வீணாக இச்செய்தியை பரப்பி வருகின்றனர். 

எனவே நானோ முஃப்தி அவர்களோ ஓர் அரசியல் விவகாரம் கொண்ட நிகழ்விலோ, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்திலோ ஒரு போதும் கலந்து கொள்ள வில்லை என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 

சிலர் தமது சொந்த குரோதங்களையும் வீணாக ஒருவரின் மானத்தை இழிவு படுத்தவும் இவ்வாறு   செய்வதையும் நோக்கமாகக் கொண்டு   மோசமான செயலில் ஈடுபடுகின்றனர் . 

இப்படியான செய்திகளை பரப்பி பாவத்திற்கு துணை போகவேண்டாம் என்று அன்பாகவும் வினையமாகவும் அனைவரையும்  வேண்டுகிறேன்.

நானும் அந்நிகழ்வில் கலந்து கொண்டவர், ஏற்பாடு செய்தவர்  என்பதால் இப்படியான பொய்யான செய்திகளை பார்த்து பாராமுகமாக இருக்க முடியாது என்ற காரணத்தினால் இதனை அறியத் தருகின்றேன். 

இவ்வாறு இன்று அநேகமான பொய்யான தகவல்களை சமூக வலையத்தளம் மூலமாக பலரும் பரப்பி வருகின்றனர்; எனவே அவற்றை உறுதிப்படுத்தாத வரையில் எவருக்கும் பகிர்ந்து கொள்வதை தவிர்த்து கொள்ளுங்கள். 
ஜஸாக்குமுல்லாஹ் கைரா. 

இப்படிக்கு, 

மௌலவி. எச். உமர்தீன், 
கண்டி.

1 comment:

Powered by Blogger.