Header Ads



முஸ்லிம்களிடம் வாக்குகளுக்காக கையேந்த மாட்டோம், தாமரை மொட்டே வெற்றிச்சின்னம் - விமல்

வாக்குகளுக்காக ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ், முஸ்லிம் மக்களிடம் நாம் கையேந்தவில்லை. அதேபோல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களிடம் கையேந்தமாட்டோம். அவர்கள் விரும்பினால் எமது வெற்றியின் பங்குதாரர்களாக மாறலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாங்கள் தமிழ், முஸ்லிம் மக்களின் எதிரிகள் அல்லர். அவர்கள் தான் எம்மை எதிரிகளாகப் பார்க்கின்றார்கள். அதனால் தான் அவர்களின் ஆதரவுக்காக ஜனாதிபதித் தேர்தலில் நாம் காத்திருக்கவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களின் ஆதரவை வேண்டி நிற்க நாம் தயாரில்லை. ஏனெனில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு இன்றி மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை பொதுமக்கள் முன்னணி பெறும்.

ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளரான சஜித் பிரேமதாஸவுக்கே வாக்களித்தார்கள். ஆனால், தமிழ்,முஸ்லிம் மக்களால் அவரை வெல்ல வைக்க முடிந்ததா?

வடக்கு, கிழக்கிலுள்ள 80 வீதத்துக்கும் அதிகமான தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்தும் இறுதியில் அவர் படுதோல்வியே அடைந்தார். இன்று அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து கூடத் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

வேறு வழியின்றி முகவரியற்ற ஒரு கட்சியில் பொதுத்தேர்தலில் அவர் போட்டியிட வேண்டிய நிலைமை வந்துள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலான பௌத்த,சிங்கள மக்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கே வாக்களித்து அவரை அமோக வெற்றியடைய வைத்தார்கள்.

எனவே, அவர் தலைமையிலான இந்த அரசையும் பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைக்கும் வகையில் பௌத்த,சிங்கள மக்கள் வாக்களிப்பார்கள். அவர்களின் வாக்கு பொதுஜன முன்னணியின் 'தாமரை மொட்டு' சின்னத்துக்கே. அதுவே இலங்கை அரசியல் வரலாற்றின் வெற்றிச் சின்னமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்வின்

6 comments:

  1. ​பெரும்பான்மையை மேலுயரத்தி, தமிழ்,முஸ்லிம் சமூகங்களைத் தாழ்த்தி கேவலப்படுத்தி ஆட்சி நடத்த கனவுகாணும் இவரையும் இவரைப்போன்ற அனைத்து இனவாதச் சக்திகளுக்கும் சரியான தண்டனையும் பாடத்தையும் கற்றுக் கொடுக்க இந்த உலகில் அல்லாஹ் போதுமானவன். இந்த சக்திகளுக்கு எதிராக அமைதியான சட்டத்துக்கு உற்பட்ட போராட்டம் நடத்த இம்மக்களைத் தூண்ட வேணடும்.

    ReplyDelete
  2. அளவுக்கு அதிகமான ஆணவம் ஒருநாள் சரிவை கொடுப்பது உலக நியதி

    ReplyDelete
  3. முஸ்லீம்களிடம் வாக்குகள் கேட்கமாட்டோம் என இவர் யாரை குறிப்பிடுகிறார்? இவருடைய கட்சியின் பேச்சாளர் முஸம்மில் உள்பட பல முஸ்லீம்கள் இவர் சார்ந்த பொதுஜன பெரமுனை கட்சியின் அபேட்சகர்களாகவும் ஆதரவாளர்களாக வரும் இருப்பது இவருக்கு தெரியாதா?அல்லது இவருக்குள் ஊறிப்போன இனக்குரோதம் இவை பற்றியெல்லாம் விளங்காமல் இவர் அறிவை சிதைத்துவிட்டதா?எப்படி இருந்தாலும் இந்தளவுக்கு இவரின் நிலமை மோசமடைந்துள்ளதை நினைத்து வருந்துகிறோம்.

    ReplyDelete
  4. Muslims should "NOT" be agitated with "FOOLISH" statements made by politicians like Wimal Weerawansa. SLPP and leading politicians of the Sri Lanka Peoples Freedom Allaince have already acknowledged that the Muslims casted just over 300,000 votes for Gotabaya Rajapaksa at the 2019 Presidental Elections. Gamanpila has confirmed this in a TV interview. The Muslim Vote bank is hoping to cast at least around 550,00 votes to the SLPP/Pottuwa/Sri Lanka Peoples Freedom Alliance at the next general elections in August 2020, Insha Allah. IDIOTIC politicians like Wimal Weerawansa is worried about this "TREND" and is trying to "STOP" these votes being given to the "POTTUWA" so that he can be "barking" at the Muslims for the next 4 years. The Muslims should look at the larger picture and move towards becoming "PARTNERS" in the process of forming the next 2/3 majority governemt by Mahinda, Gotabaya and Basil. Marjan Faleel Hajiar and Attorney-at-Law Ali Sabri are also propogating this. The ONLY way to make IDIOTIC, so called nationalistic politicians like Wimal Weerawansa is to shut his voice in the SLPP/POTTUWA ALLAINCE by Muslims casting our votes to the SLPP/POTTUWA ALLAINCE, Insha Allah. Gotabaya Rajapaksa, Mahinda Rajapaksa and Basil Rajapaksa have invited the Muslims to vote their group. Muslims should vote POTTUWA at the next general elections, Insha Allah.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  5. இந்த கூறு கெட்ட புன்னாக்குடைய செய்திகளை பிரசுரிக்க வேண்டாம்

    ReplyDelete
  6. அடே உன்னை யாருடா கையேந்த சொன்னது ஆனால் சவுதியிடம் கையேந்தலாம் மானங்கெட்டவனே

    ReplyDelete

Powered by Blogger.