Header Ads



இலங்கையை ஆட்சி செய்வது சீன அரசாங்கமா..? சுனில் ஹந்துன்நெத்தி கேள்வி

சீன அரசின் தேவைக்கு அமைய புத்தளத்தில் 300 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் தொடர்பான எந்த தகவல்களும், நாட்டுக்கு வெளியிடப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புத்தளத்தில் 300 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் நிலையம் ஒன்றை நிர்மாணிக்க அரசாங்கம் மீண்டும் சீனாவின் சைனா மெஷினரி லீசிங் கம்பனி என்ற நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்த யோசனையை கொண்டு வந்த இலங்கை அரசாங்கம் அல்ல சீன அரசாங்கம் என்பதே இதில் உள்ள பாரதூரமான பிரச்சினை.

இலங்கையை ஆட்சி செய்வது இலங்கை அரசாங்கம் அல்லது சீன அரசாங்கமாக என்ற கேள்வி எமக்கு ஏற்படுகிறது.

விலை மனுக்கள் கோரப்படாமல், வெளிப்படையாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளாத அனைத்து சந்தர்ப்பங்களிலும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இலங்கை மின்சார சபை நஷ்டமாக்கப்பட்டது. இந்த மின்சார மாஃபியாக்களை உருவாக்கும் நபர்கள் மின்சக்தி அமைச்சில் அல்லது மின்சார சபையில் அல்லது நிதிமைச்சில் இருக்க வேண்டும் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.