Header Ads



முழு நாட்டிலும் பௌத்தர்கள் பெரும்பான்மையாக, இருந்தாலும் கிழக்கில் சிறுபான்மையாக உள்ளோம்

- மெட்றோ -

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில முறையற்ற செயற்பாடுகள் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு சிங்கள பௌத்தர்களின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார்.

திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கான சிங்கள பௌத்த மக்களின் வாக்குகள் குறைந்துள்ளமைக்கும் இதுவே காரணம் என முன்னாள் அமைச்சரான தயா கமகே நெத் எப்எம் சிங்கள இணைத்துக்குத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் என்பது இனவாதத்தை வைத்தே அரசியல் செய்கிறது. முன்னாள் அமைச்சர் ஹக்கீம் எனது நல்ல நண்பர். அவர் கண்டியிலிருந்து கிழக்கு மாகாணத்துக்குச் சென்று அங்குள்ள அப்பாவி முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இனவாத செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறார்.

கிழக்கு மாகாண சபையில் நான் இருந்துள்ளேன். ஆனால் முழு நாட்டிலும் சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் அங்கு நாங்கள் சிறுபான்மை இனத்தவராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.