Header Ads



இலங்கையுடன் நல்லுறவை விரும்புவதாக, பிரதமர் மஹிந்தவிடம் ஈரான் தெரிவிப்பு

(இராஜதுரை ஹஷான்)

ஈரானுக்கும், இலங்கைக்குமான நல்லுறவை மேலும் பலப்படுத்துவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும்,  இலங்கைக்கான ஈரான் தூதுவரும் கலந்துரையாடினார்கள். இலங்கையுடனான உறவை தொடர்ந்து பலப்படுத்த தாம்  விருப்பம் கொள்வதாக ஈரான் நாட்டு தூதுவர் பிரதமரிடம் தெரிவித்தார்.  

ஈரான் நாட்டுக்கான இலங்கை தூதுவர் ஹசிம் ஹஸ்ஜஷாடுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று அலரிமாளிகையில் இடம் பெற்றது.

இச்சந்திப்பு குறித்து  பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இரு நாடுகளுக்கும் வரலாற்று காலம் தொடக்கம் காணப்படும் நல்லுறவை மேலும் பலப்படுத்தி முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இச்சந்திப்பின் போது இரு தரப்பிலும் கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவு 1962ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கைக்கான  ஈரான்  நாட்டு தூதரகம் கொழும்பில் 1975ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. ஈரான் நாட்டில் டெஹ்ரானின் இலங்கை தூதரக காரியாலயம் 1990ம் ஆண்டு நிறுவப்பட்டது.

இரு  நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை தொடர்ந்து பலப்படுத்த  தாம் விருப்பம் கொள்வதாக  இலங்கைக்கான ஈரானிய தூதுவர் பிரதமரிடம் தெரிவித்தார்.  இலங்கையில் இருந்து  ஈரானுக்கு 150 தொடக்கம் 200 டொலர் மில்லியன் பெறுமாதியான  உற்பத்திகள்  ஏற்றுமதி  இறக்குமதி செய்யப்படுகின்றன. மத்திய  கிழக்கு நாடுகளின் ஏற்றுமதி நடவடிக்கைகளின் அடிப்படையில் இலங்கைக்கும், ,ஈரானுக்கும் இடையிலான ஏற்றுமதி  நடவடிக்கைளில் 90 சதவீதமானவை தேயிலை  தொழிற்துறை  சார் உற்பத்திகளாகும்.

No comments

Powered by Blogger.