Header Ads



வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள இலங்கையர்களில், மாணவர்களை அழைத்து வருவதற்கே முன்னுரிமை - ஜனாதிபதியின் ஆலோசகர்

வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளில் வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள மாணவர்களை அழைத்து வருவதற்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது என ஜனாதிபதியின் வெளிவிவகார உறவுகளிற்கான ஆலோசகர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள இலங்கை தொழிலாளர்களை அழைத்துவருவதற்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களை அழைத்துவரும் நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் இலங்கை தொழிலாளர்களை அழைத்துவருவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ள அவர் அமெரிக்க பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளில் 400ற்க்கும் அதிகமான மாணவர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

நாங்கள் தற்போது மாணவர்களிற்கே முன்னுரிமை வழங்குகின்றோம்,நாளை பிலிப்பைன்சிலிருந்து 275 மாணவர்கள் அழைத்து வரப்பட்டு விமானநிலையத்தில் பிசிஆர் சோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் முகாம்களிற்கு அனுப்பப்படுவார்கள் என ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் வெளிநாடுகளிற்கு தற்காலிக விசாக்களில் சென்றவர்களை அழைத்து வரமுயல்வோம் என குறிப்பிட்டுள்ள அவர் அவ்வாறு சென்றவர்கள் குறித்த பல தகவல்கள் கிடைத்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

அது முடிவடைந்ததும் நாங்கள் வெளிநாட்டில் சிக்குண்டுள்ள தொழிலாளர்களை அழைத்து வரும் நடவடிக்கையை ஆரம்பிப்போம் முதலில் கர்ப்பிணிகளிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பினை இழந்தவர்களிற்கும் முன்னுரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 30 வீதமான கொவிட் 19 நோயாளிகள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என தெரிவித்துள்ள ஜனாதிபதியின் ஆலோசகர் இலங்கையிடம் உள்ள மருத்துவவசதிகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களை கருத்தில்கொள்ளும்போது பெருமளவு நோயாளிகளை கையாள முடியாத நிலையில் இலங்கை காணப்படுகின்றது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கைக்கு தங்களை திருப்பி அனுப்புமாறு கோரும் இலங்கையர்களை அந்த நாடுகளின் விமானநிலையங்களில் வைத்து பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவது குறித்து நாடுகளுடன் ஆராய்ந்து வருகின்றோம் என தெரிவித்துள்ள ஜனாதிபதியின் ஆலோசகர் இலங்கைக்கு வருபவர்களிற்கும் விமானநிலையங்களில் பிசிஆர் பரிசோதனைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. எத்தனை நாளைக்கு தான் மூடியே வெச்சிருக்க போறீங்க.
    எங்க உயிர் கிடந்தா வருவோம்டா ஒரு நாள் நாட்டுக்கு. வந்தா திரும்பி போக மாட்டோம்.
    உங்களுக்கு அந்நிய செலாவணி வேணும்னா, உங்க vip மாரையோ உங்க vip மாணவர்களையோ அனுப்பி எடுத்துகங்கோ.

    ReplyDelete

Powered by Blogger.