Header Ads



நாடளாவிய ரீதியில் பள்ளிவாசல்களில் தொழுகை


-  எஸ்.எம்.எம்.முர்ஷித்   -

நாட்டிலுள்ள சகல மதஸ்தலங்களை நிபந்தனைகளோடு அரசாங்கம்திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் இன்று -12- வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில்  பள்ளிவாயல்களில் தொழுகை தனித் தனியாக இடம்பெற்றது. 

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் மற்றும்கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பள்ளிவாயல்களில் லுகர் தொழுகையில்தனித் தனியாக ஈடுபட்டனர். 

இதன்போது அரசாங்கம் மற்றும் சுகாதார திணைக்களத்தினால்வழங்கப்பட்;ட அறிவுறுத்தல்ளுக்கமைய தனிநபர் தொழுகைக்காக பள்ளிவாயல்கள் திறக்கப்பட்டுஒரே சமயத்தில் 50 பேருக்குகுறைவானோர் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தொழுகைக்கு அனுமதி வழங்கப்பட்டு தொழுகையும்இடம்பெற்றது.

 அத்தோடு பள்ளிவாயலினுள் இருக்கின்ற போது ஒவ்வொருவரும் முகக்கவசத்தை அணிந்திந்ததோடு, ஒரு மீட்டர் சமூக இடைவெளியையும் பேணும் வகையில் இறைகடமையில் ஈடுபட்டதை காண முடிந்தது. 

கூட்டுத் தொழுகைக்கோ, ஜும்ஆ தொழுகைக்கோ இதுவரை அனுமதிவழங்கப்படவில்லை. பள்ளிவாசல்களை திறப்பதற்கு முன்னர் கட்டாயம் அந்தந்த பிரதேச பொதுசுகாதார பரிசோதகரின் அனுமதியை பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 



2 comments:

  1. முஸ்லிம் என தம்மை மார்தட்டிப் பேசுபவர்கள் செய்த ஏதோ அடிப்படைப் பிழைகள் காரணமாக, முஸ்லிம்களின் அடிப்படையான பர்ழான தொழுகைகள், ஜும்ஆ த் தொழுகை உற்பட அடிப்படை மார்க்க கடமைகளை நிறைவேற்ற அல்லாஹ் முஸ்லிமல்லாத முஸ்லிம்களின் விரோதிகளான அதிகாரிகளின் கட்டளைகளை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கின்றான். இதன் உண்மைக் காரணங்களை இந்த சமூகம் கண்டுபிடித்து அவற்றைத் தவிர்ந்து கொண்டு இதன் பிறகாவது அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்)அவர்கள் காட்டிய வழிகாட்டல்களுக்கும் அமைய அவர்கள் தங்கள் வாழ்க்ைகயை அமைத்துக் கொள்ளாவிட்டால் يستبدل قوما غيركم என அல்லாஹ் வாக்களித்தவாறு மற்ற சமூகத்தை அனுப்பி உங்களை இல்லாமல் செய்து விடுவான். கொரோனாவின் பின் யுகம் போலியையும் உண்மையையும் நிச்சியம் பிரித்துக் காட்டும்.அதன் ஆரம்ப அறிகுறியா இந்த நிலைமை என நாம் சீரியஸாக சிந்திக்க வேண்டும்.

    ReplyDelete
  2. Porumainin Vettri - Allahutaalaawin Theeripu, ALHAMDULILLAH.
    May AllMighty Allah bless the Muslim community to follow the "REGULATIONS" strictly and not end up with the authorities messing it up. The ACJU should follow the instructions "EXTREMELY" and advice all Ulema to abide by the regulations when conducting all forms of prayers. The ACJU should NOT try to "AMEND" these regulations and try to make seperate "ANNOUNCEMENTS"and should "JUST KEEP AWAY" from Mosque, Ulema and Jamath politics, Insha Allah. That will be very "healthy" for the Muslim community, Insha Allah.
    Noor Nizam - Conveber "The Muslim Voice"

    ReplyDelete

Powered by Blogger.