Header Ads



இலங்கையிலிருந்து இம்முறை ஹஜ், செய்ய அனுமதியில்லை - உத்தியோகபூர்வமாக அறிவித்தது சவூதி


கொரோனா நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து இம்முறை ஹஜ்ஜுக்கு எவரையும் அனுமதிப்பதில்லை என சவூதி அரேபியா  உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை 22 ஆம் திகதி சவூதி ஹஜ் அமைச்சர் அமைச்சர் கலாநிதி மொஹமட் சாலிஹ் பின் தாஹிர் பேந்தன்,  இலங்கை தேசிய ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீலை தொடர்பு கொண்டு இத்தகவலை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, தேசிய ஹஜ் குழுவின் உறுப்பினர்களான அர்கம் உவைஸ் மற்றும் சத்தார் ஆகியோரும் உடன் இருந்துள்ளனர்.

அதேவேளை இம்முறை ஹஜ் செய்ய திட்டமிட்டு அதற்காக முகவர்களிடம் பணம் செலுத்தியவர்கள் அதனை மீறப் பெற்றுக்கொள்ளலாம் எனவும், இதில் முகவர்கள் நீதமாக நடந்து கொள்ள வேண்டுமெனவும் மர்ஜான் பளீல் ஹாஜியார் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. இந்த செய்தியை உறுதிப்படுத்த சாட்சிகளும் அரசியல் சார்பு நபர்களின் ஊடுருவல் ஆதாரங்களும் தேவையில்லை. சவூதி அரேபிய உத்தியோகபூர்வமான செய்தித்துறை இந்த செய்தியை வௌியிட்டால் அது உலகம் முழுவதும் இம்முறை ஹஜ் செய்ய உத்தேச திட்டமிட்டிருந்த அனைவருக்கும் பொருந்தும்.

    ReplyDelete

Powered by Blogger.