Header Ads



சவூதி அரேபியாவில் உள்ள, இலங்கையர்களுக்கு இம்முறை ஹஜ் செய்ய வாய்ப்பு

கொரோனா நெருக்கடி காரணமாக, இம்முறை (2020) ஹஜ் செல்வதற்கான வாய்ப்பை உலக நாடுகளுக்கு சவூதி அரேபியா நிறுத்தியுள்ளது.

இதையடுத்து சவூதியில் உள்ள இலங்கையர்களுக்கு, சவூதி அரேபியாவில் இருந்தபடியே, புனித ஹஜ் கடமையை நிறைவேற் றும் வாய்ப்பை வழங்க இம்முறை சவூதி அரேபியா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஹஜ் விவகாரங்களுக்கான அமைச்சர் கலாநிதி மொஹமட் சாலிஹ் பின் தாஹிர் பேந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய ஹஜ் விவகார குழுவின் சிபார்சின் அடிப்படையில், இந்த சர்ந்தப்பத்தை வழங்க  சவூதி அரேபியா திட்டமிட்டுள்ளதாகவும் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் குறிப்பிட்டார்.

சவூதி அரேபியாவிடமிருந்து இதுபற்றிய மேலதிகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றதும், இதுபற்றி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கை விரைவு படுத்தப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. தயவு செய்து ஹஜ் விடயத்தில் பொய்யையும் நயவஞ்சக அரசியலை கலந்து அதன் துய்மையை மாசடையச் செய்ய வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.