Header Ads



கொரோனாவிலிருந்து குணமடைந்த, பெண்ணுக்கு மீண்டும் கொரோனா

அநுராதபுரம் கெப்பித்திக்கொல்லாவையைச்  சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

குவைத்திலிருந்து நாடு திரும்பிய குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த பெண் சிகிச்சைக்கு பின் பரிசோதணைகளில்  குணமடைந்ததை உறுதி செய்ததை தொடர்ந்து, கடந்த 14 ஆம் திகதி வைத்தியசாலையைில் இருந்து வீடு திரும்பினார்.

இவ்வாறு வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள் தென்படவும், நேற்று (15.06.2020) அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் கொரோனா வைரஸ் அவரது உடலில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலதிக சிகிச்சைக்காக அவர் அங்கொடை தோற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அநுராதபுர வைத்தியசாலையின்  பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க கூறுகையில்,

இதுபோன்ற பல கொரோனா தொற்றுக்குள் பதிவாகியுள்ளன, மேலும்  இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகும் போது அவர்களிடம் இருந்து கொரோனா தொற்று பரவ வாய்ப்பில்லை என்றும் அது குறித்து எவரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.