Header Ads



முஸ்லிம்கள் என்னை ஆதரிக்காவிட்டாலும், நட்பு ஒருபோதும் குறையாது - தனசிரி அமரதுங்க

 (அஸ்ரப் ஏ சமத்)

ராஜபக்ச குடும்பம் ஜனாதிபதி சட்டத்தரணிஅலி சப்றிக்கு கடமைப்பட்டுள்ளது. அவா் கடந்த 14 வருடங்களாக இவா்களது பல வழக்குகளில் ஆஜராகி ஒரு சதமேனும் அறவிடாது ஆஜராகி வந்தாா். எத்தனையே பிரபல்யமான சட்டத்தரணிகள் இருந்தும் நம்பிக்கையானவா் ஜனாதிபதி கோட்டபாய கதிரையில் இறுப்பதற்கு அமேரிக்க பிரஜை என்ற வழக்கினை வென்றவா். ஏனைய சில முஸ்லிம் அரசியல் தலைவா்கள் போன்று அவா் ஒரு போதும்  விலைபோகாதவா் தான் அலி சப்றி - அவருக்கு எதிா்காலத்தில் பிரதியமைச்சரோ அல்லது ஒரு கபினட் அமைச்சர் ஆகுவாா். என தெகிவளை கல்கிசை முன்னாள் மேயா் தனசிரி அமரதுங்க உரையாற்றினாா். 

நேற்று முன்தினம் 26 தெகிவளை சகரான் வரவேற்பு மண்டபத்தில் தெகிவளை பள்ளிவாசல் சம்மேளனம் இஸ்மாயில் காஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தனசிறி மேற்கண்டவாறு உரையாற்றினாா். கடந்த பாராளுமன்றத் தோ்தலிலும் நான் தோ்தல் கேட்டேன். எனக்கு போதிய வாக்குகள் கிடைக்கவில்லை. முஸ்லிம்கள் வாக்களிக்க வில்லை தெகிவளை கல்கிசை ரத்மலானைப் பிரதேசத்தில் 30 ஆயிரம் மேற்பட்ட முஸ்லிம் வாக்குகள் உள்ளன. நகர சபையில் 5க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாநகர சபை உறுப்பிணா்கள் உள்ளனர். 

நான் என்றும் முஸ்லிம்களது நன்பன். நான் மேயராக இருந்த காலத்தில் இங்குள்ள பள்ளிவாசல்கள் தலைவா்கள் நோலிமிட் முபராக் காஜி, யுசுப் காஜி, முஸ்லிம் சலாகுதீன் காஜி, கோல் கேட்டறிங் சப்றி காஜி, சகரான் மண்டபத்தில் உரிமையாளா் புதவல்வா், மாநகர சபை உறுப்பினா் சரினா மற்றும் கமீட் எல்லோறும் இங்கு வருகை தந்துள்ளனா். நான் மேயராக இருந்த காலத்தில் தான் கொழும்பு மநாகர சபை மேயராக உமா் காமில் இருந்தாா். நான் இன்றும் அவரை சேர் சொல்லும் ஓரே ஒரு மேயா் அவரிடமிருந்து தான் மாநகர சபை ஒன்றை எவ்வாறு நிர்வகிப்பது பற்றி கற்றுக் கொண்டேன், அவா் அடிக்கடி ஆலோசனை வழங்குவாா். ராசிக் சறுக் அவா்கள் இங்கு ஆற்றிய உரை மிகவும் என்னைக் கவா்ந்தது. 

இவ்வாறு தெகிவளை கல்கிசையில் முஸ்லிம்கள் எவ்வித குழப்பமும் இன்றி ஒரு அமைதியான சுழ்நிலையில் வாழ்வதற்கான ஒரு பிரதேசம் எனது மாநகர முதல்வா் காலத்தில் இப்பிரதேச வாழ் முஸ்லிம்களோடு நண்பனாக பழகி வந்தேன். என்னை அரசியலுக்கு கொண்டு வந்தவா் மகிந்த ராஜபக்ச அவா்கள் நான் அவா்கள் பதவி இல்லாதபோது அவா் காலடியில்தான் இருந்தேன் எனக்கு பதவி அரசியல் அங்கிகாரம் இல்லாவிட்டாலும் நான் ராஜபக்ச குடும்பத்துடனேயே இருப்பேன். ஆகவே தான் இம்முறை தெகிவளை கல்கிசை பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் என்னை ஆதரிக்காவிட்டாலும் எனது நட்பு ஒருபோதும் குறையாது. கடந்த முறை எனது வீட்டில் நோன்பு திறக்கும் வைபவம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தேன். எனது நண்பா்கள் .  




No comments

Powered by Blogger.