June 27, 2020

பாராளுமன்ற கதிரை சூடாக்கப்பட்டதே தவிர வேறு, எந்த உரிமையும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படவில்லை

(எஸ்.அஷ்ரப்கான்)

காலாகாலமாக அம்பாரை மாவட்ட மக்களால்  வாக்களித்தவர்கள் வென்றுவிட்டு, பாராளுமன்ற கதிரையை சூடாக்கியதை தவிர வேறு எந்த உரிமையையும் இம்மாவட்ட மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவில்லை என சட்ட முதுமாணி முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள்  காங்கிரஸின் மருதமுனை கூட்டம் வேட்பாளர் வை.கே. றஹ்மான் தலைமையில்  மருதமுனையில் நடைபெற்றபோது, அதில் கலந்து கொண்டு உரையாற்றிய வை.எல்.எஸ். ஹமீட் மேலும் அங்கு உரையாற்றும் போது, 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு முதலாவதாக களம் இறங்கியபோது குறிப்பிட்ட வாக்குகளை அளித்து மக்கள் எங்களுக்கு ஆதரவினை வழங்கினர். ஆனால் கடந்த முறை எல்லோரும் நீங்கள் வாங்களித்தவர்கள் உங்களுக்கு செய்தது என்ன? அவர்கள் பாரளுமன்றம் சென்று கதிரைகள் சூடாக்கப்பட்டதே தவிர ஏதுவும் செய்யப்படாத நிலையிலே மீண்டும் உங்களிடம் வாக்குகளுக்காக வந்துள்ளார்கள்.

இவர்களது பொய் பித்தலாட்டத்தையும் ஏமாற்று யுக்திகளையும் நன்கு  அறிந்துள்ள மக்கள் தற்போது இவர்களுக்கு சிறந்த ஒரு பாடத்தினை புகட்ட ஆயத்தமாவதை மாவட்டம் முழுவதும் காணக்கூடியதாக உள்ளது.

இந் நிலையில் இம் முறை பொது தேர்தலில் திகாமட்டுள்ள மாவட்ட மக்கள் ஒரு இலட்சத்துக்கு மேல் வாக்குகளை அகில இலங்கை மக்கள் காங்கிரசிக்கு தரும் போது எமது கட்சியில் போட்டியிடும் வேட்பாளரில் இருந்து 3 பேர்  தெரிவு செய்யப்பட முடியுமாக இருந்தால் எதிர்வரும் நாடளுமன்றத்தில் இணக்க அரசியலாக இருந்தாலும், எதிர் அரசியலாக இருந்தாலும் அவற்றிற்கு எவ்வாறு காத்திரமாக முகம் கொடுப்பது என்பதை இந்த சமூகத்திற்றுக்கும் ,நாட்டிற்கும் நாம் காட்டுவோம்.

எனவே தான் மாவட்டத்தில்  ஒரு இலட்சத்துக்கு மேல் வாக்களிக்ககூடிய சாத்தியம் உள்ள போதும் இந்த வாக்கு அதிகரிப்பை வேட்பாளர்கள் கட்சி அங்கத்தவர்கள் மாத்திரம் செய்து விட முடியாது. சமுகத்தில் அக்கறை உள்ளவர்கள் இவர்கள் தான் உங்களுக்காக என்றும் சேவை செய்பவர்கள் என நீங்கள் எங்களை நம்பினால் எதிர்வரும் தேர்தல் முடிவின் போது 3 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியை நீங்கள் ஒவ்வோருவரும் சொல்ல வேண்டும். நீங்கள் இதற்காய் முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் அம்பாரை மாவட்டத்தில்  காத்திரமான உறுப்பினர்களை பெற முடியும். இம்முறை தேர்தலை மக்கள் மிகவும் புத்திசாதுரியமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது. என்றுமில்லாதவாறு இம்முறை பாராளுமன்றம் சிறுபாண்மைகளுக்கு பெரும் சவால் நிறைந்தததாக இருக்கும்.

இந்த அரசு  கடந்த 2010 ஆம் ஆண்டு யுத்த வெற்றியைக் கொண்டு தேர்தலில் வெற்றி கொண்டதை முதலீடாக மாற்றி மாகாண சபையை வெற்றி பெற்று அதனூடாக பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று இந்த யுத்த வெற்றியை கொண்டே அனைத்து தடைகளையும் வெற்றி கொண்டார்கள்.

அந்த நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் தான் சரியான தேர்தல் வியூகம் என்று புரிந்து கொண்டு நல்லாட்சி காலத்திலும் அதன் பின்பும் நடந்த தேர்தல்களிலும் முழுக்க முழுக்க இனவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டு அதன் வெற்றியை கொண்டாடி கடந்த தேர்தலில் அவர்கள் அறுவடை செய்தார்கள். அதே இனவாத நடைமுறையைத்தான் இந்த பொதுத் தேர்தலிலும் அவர்கள் முன்வைக்கின்றார்கள்.

எனவேதான் இவ்வாறான ஆட்சியாளர்களிடமிருந்து எமது சமூகம் விடுதலை பெற வேண்டுமென்றால், சுபீட்சமாக எமது நாட்டிலே மூவினமும் வாழ வேண்டுமென்றால் இம்முறை சமூகம் சார்ந்த அக்கறையுள்ள, பொய் வாக்குறுதிகளுடன் காலத்திற்குக் காலம் மக்களை ஏமாற்றி விட்டு சுகபோகம் அனுபவிக்கின்ற அரசியல்வாதிகளை இம்முறை மக்கள் புறந்தள்ளி விட வேண்டும்.

இனி வரும் காலங்களில் அரசியல் முதிர்ச்சி பெற்ற, படித்த, சவால்களுக்கு முகம் கொடுக்கின்றவர்களை இனங் கண்டு மக்கள் சவால் நிறைந்த பாராளுமன்றுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார்.

4 கருத்துரைகள்:

I object your honour. சட்டமுதுமாணி ஐயா அவரகளின் வாதத்தை யான் பலமாக எதிர்க்கின்றேன். அம்பாரை மாவட்ட மக்களினால் வாக்களிக்கப்பட்டு வெற்றி பெற்றவர்கள் மட்டும்தான் பாhராளுமன்றின் கதிரைகளைச் சூடாக்கினார்கள் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இக்கருத்து அபத்தமானது. இக்கருத்து ஏதோ மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் கண்டி மாவட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டவர்கள் (முஸ்லிம் பாஉ) ஏதோ அவர்தம் மாவட்டங்களுக்கு அபரிமிதமாக ஏதோ செய்து விட்டார்கள் என்பதை அல்லவா இக்கூற்று கூறுகின்றது. இவரகள் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய ஒரே மட்டைகள்தான் ஏன்பதனையும் அதாவது வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற இம்மாவட்ட முஸ்லிம் பாராளுமன்றவாதிகள் இதனையே செய்தார்கள் (அதாவது சமூக நல்லிணக்கம் சமூக ஒற்றுமை அபிவிருத்தி என்பனவற்றிக்காக ஒன்றுமே செய்யவில்லை) என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நீங்கள் பாராளுமன்றம் சென்றுஎதனைச் சூடாக்கப் போகிறீர்கள்? கடந்த காலத்தில் றிசாத்தை சூடாக்கித் திரிந்தம்மையை நாங்கள் இன்னும் மறக்கவில்லை.

SHATTAMUTHUMANI VERU, ARASHIAL
NAANAM VERU,
AVARKAL SHOODAAKIA KATHIRAIKALAI
NEENGALUM SHOODAAKA VENDUM, ENRU
AASHAIPADUKIREERKALEI,
MUSLIMGALIN VAAKKUKALAI VITRU
VIYAPARAM SHEIUM UNGALAI ANUPPAVENDIA
IDAM MAKKALUKKU THERIUM.
KATTILKALIN KEEL OLINDU NITKA
IDAM AMAITHUKOLLUNGAL.

You are dividing the votes so this will reduce Muslim representation in the district.

Post a comment