Header Ads



இனவாதிகளின் வாய்களை அடைக்கவும் - சம்பந்தன்

நாட்டில் நல்லிணக்கத்தையும் அரசியல் தீர்வுக்கான பணிகளையும் குழப்பியடித்து முழு நாடும் பௌத்த - சிங்கள தேசம் என்ற நினைப்பில் தெற்கு இனவாதிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அவர்களின் வாய்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு அடக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ்பேசும் மக்களின் தாயகம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு தமிழ்பேசும் மக்களின் சொந்தப் பூமி என்ற நினைப்பில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்துக்களை வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் இரா.சம்பந்தன் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கோட்டாபய அரசின் ஆதரவுடன்தான் தெற்கில் இனவாதிகள் தற்போது இயங்குகின்றனர் என்ற கருத்து எல்லோர் மத்தியிலும் இருக்கின்றது. எனவே, இவ்வாறானவர்களுக்கு ஆதரவு வழங்குவதை அரசு உடன் நிறுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்திக் கூறினார்.

5 comments:

  1. சிங்களக்குடியேற்றங்களை வடக்கு கிழக்குப்பிரதேசங்களில் விஸ்தரிப்பதற்கான முஸ்தீபுகள் நடைபெறும இச்சந்தர்ப்பத்தில் இரா சம்பந்தன் ஐயா அவர்களால் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பிவைக்கப்படுள்ளது அக்கடிதத்தை ஞானசாரிடம் கொடுத்து மீடியாக்களில்இனவாதத்தைக்கக்கும் வித்தில் பதில் அழிக்கப்பட்டுள்ளது

    ReplyDelete
  2. We are appreciate his speech!

    ReplyDelete
  3. கோத்தபயவும் மஹிந்தவும் இனவாதிகள் அல்லர். ஆயினும் அவரகளோடு இணைந்திருப்பவரகள் ஆபத்தான பேர்வழிகளாவர். இனவாதத்தை மேம்படுத்த எவ்வாறு சிங்கள கட்சிகள் அனைத்தும் இடதுசாரிகள் உட்பட ஒன்று சேர்ந்து முஸ்லிம் அரசியல் தலைவரகளை அவரகளுடைய கட்சியிலிருந்து ஓரம் கட்டினார்களோ அதுவே அவரகளது முஸ்லிம் எதிர்புணர்வுக்கு சிறந்ததொரு உதாரணமாகும். இனிமேல் தமிழ் முஸ்லிம் கட்சிகள் தாமதியாது ஒன்று சேர்ந்து தம் எதிர்ப்புணர்வுகளை வெளிப்படையாகக் காட்டினாலே தவிர தொடரும் இனவாதத்தின் சூட்டைத் தவிர்க்க முடியாது என்பதே பொதுவான அபிப்பிராயமாகும். இல்லாவிட்டால் முஸ்லிம் தலைமைகள் பதவிக்காக மக்களைத் தொடர்ந்து காட்டிக் கொடுப்பதும் தமிழர்கள் உரிமைக்காகப் போராடுவதும் தொடர்ந்தவண்ணமே இருக்கும்.

    ReplyDelete
  4. யாரும் யாரையும் சுத்தம் காணும் கைங்கரியத்தை உடனடியாக நிறுத்திவிட்டு சம்பந்தன் ஐயா வேண்டிக் கொண்ட ​வேண்டுகோளை உடனடியாக செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்ைக எடுத்தால் அதுவே போதுமானதாகும்.

    ReplyDelete
  5. இனவாதிகளை அரசு பகிரங்கமாக எதிர்த்து  தேசிய நீரோட்டத்தில் இருந்து அவர்களைத் தனிமைப்படுத்தாத வரையில், அதன் விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பு ஏற்க வேண்டும்.  செயல்களின் அடிப்படை சிந்தனைகளே.

    ReplyDelete

Powered by Blogger.