Header Ads



பள்ளிவாசலுக்கு சஜித் விஜயம், முஜிபுருடன் இணைந்த இஸ்மத் ஹாஜியார்


முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் ஜனன தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்டோர் நேற்றைய தினம் சர்வமத வழிபாடுகளுக்காக அனைத்து மதஸ்த்தளங்களுக்கு விஜயம்செய்தனர். 

இதன்போது, வாழைத்தோட்டம் பகுதியிலுள்ள பள்ளிவாசலொன்றுக்கு கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம். பாயிஸ் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் விஜயம் செய்தனர். இதன்போது, வாழைத்தோட்டம் பள்ளிவாசல்கள் சம்மேளன முக்கியஸ்தர் இஸ்மத் ஹாஜியார் உள்ளிட்டேர் அவர்களை வரவேற்பதை படத்தில் காணலாம்.



No comments

Powered by Blogger.