Header Ads



ராவய பத்திரிகை பேட்டி, விமர்சனங்களுக்கு உட்பட்டது கண்டு மிகவும் வருந்துகிறேன்


ராவய பத்திரிகையில் வெளிவந்த எனது பேட்டி விமர்சனங்களுக்கு உட்பட்டது கண்டு மிகவும் வருந்துகிறேன். அது பற்றி சில வி டயங்களை இங்கே தருகிறேன்.

1. ராவய என்னோடு மேற்கொண்ட பேட்டி சுமார் ஒன்றேகால் மணித்தியாலப் பேட்டி அதனை சுருக்கியே குறித்த பத்திரிகையாளர் ராவய பத்திரிகையில் வெளியிட்டுள்ளார். சில இடங்களில் வரும் மயக்கத்திற்கு அது காரணமாக இருக்க முடியும்.

2. இந்தப் பேட்டியின் ஊடே எம்மைப பற்றி அறிமுகம் ஒன்றை கொடுக்கவே முயன்றேன். பிற நிறுவனங்கள், இயக்கங்கள் பற்றி எதுவும் சொல்லப்படாமைக்கு அதுவே காரணம்.


3. பேட்டியின் போக்கில் தான் ஸஹ்ரான் பற்றிய கேள்வி வந்தது. அதனை தெளிவாக விளக்கும் சந்தர்ப்பம் இருக்கவில்லை. உண்மையில் தௌஹீத் ஸலபி என்ற பெயர்களில் பல இயக்கங்களும், நிறுவனங்களும் இலங்கையில் உள்ளன. அவை வன்முறையை நாடுபவகைளல்ல. ஸஹ்ரானும், அவனைச் சார்ந்தவர்களும் தௌஹீத் அல்லது ஸலபி என்ற சிந்தனைப் போக்கிலிருந்து பிறழ்ந்து இஸ்லாமியப் போக்கிலிருந்து விலகிச் சென்றவர்கள்.

இந்த உண்மையே எனது நிலைப்பாடு.

 சில கலந்துரையாடல்களில் முஸ்லிம் அல்லாதவர்களுடன் இருந்த போது கூட இதனை நான் பல முறை விளக்கியுள்ளனே;.

சகோதரர்களே!
 உங்களது மனவருத்தத்தை நான் மதிக்கின்றேன். ஒரு போதும் நான் காட்டிக் கொடுப்பவனோ, நான் மட்டுமே சரியானவன் என்று வாதாடுபவனோ அல்ல.
உள்ளங்களை அறிந்தவன் அல்லாஹ்.

உங்கள் சகோதரன்
எம்.ஏ.எம் மன்ஸூர்
19.06.2020

No comments

Powered by Blogger.