Header Ads



மங்கள சமரவீர அரசியலிலிருந்து, விலகுவது கவலையளிக்கிறது - மனோ


முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சிவில் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை வகிப்பார் என்று தான் எதிர்பார்க்கிறார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மனோ கணேசன், மங்கள சமரவீர அரசியலில் இருந்து வெளியேறுவது வருத்தமளிக்கிறது என்றார். மேலும், மங்கள சமரவீரவின் விலகல் கவலை தந்தாலும் அவர் அரசியலை விட்டு ஓய்வு பெறவோ, வேறு கட்சியில் சேரப்போவதோ இல்லை, சிவில் சமூகத்தில் பணியாற்ற போகிறேன் என்று எனக்கு கூறியதில் மகிழ்ச்சி.

இலங்கையர் அடையாளமும், பல்லின பன்மைதன்மை அடையாளமும் அவரால் இன்னமும் வலுவடைய வேண்டுமென நான் நம்புகின்றேன் என்றும் பதிவிட்டுள்ளார்

1 comment:

  1. ​கொரோனா யுகத்துக்குப்பிறகு நடைபெறும் ஒரு திருப்பம் என மங்கள சமரவீர அவர்களின் செயற்பாட்டை விபரிக்கலாம். இந்த யுகத்தில் ஏமாற்றுக்காரர்கள்,கள்வர்கள், மோசடிக்காரர்களுக்கு பொதுமக்கள் வாக்களிக்க மாட்டார்கள். இதனை தேர்தலில் போட்டியிடும் அத்தனை போட்டியாளர்களும் நினைவில் வைத்திருக்க வேண்டும். மக்கள் முதலில் அவர்களுடைய நலன்,சமூகங்களின் சகவாழ்வு, நாட்டு முன்னேற்றத்தை நன்றாக யோசித்துத்தான் முடிவெடுப்பார்கள். இதற்கு ஜேவிபி உற்பட ஏனைய சிறுகட்சிகளும் நிறைய பங்களிப்பு செய்திருக்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.