June 27, 2020

சிறந்த அரசாங்கத்தை அமைக்க தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டும்

(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுன   ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொண்ட  வெற்றி பொதுத்தேர்தலின் வெற்றியிலே முழுமைப்பெறும். ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி பாராளுமன்றத்தில் நிலையான அரசாங்கத்தை அமைக்க வேண்டும். என்பதில்  மக்கள்  கவனம் செலுத்த  வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்   மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற  நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் பல பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதாக  அமைய  வேண்டும். அரசியலமைப்பின் 19 வது திருத்தம்,  தேர்தல் திருத்த முறைமை ஆகிய   விடயங்களுக்கு   உறுதியான தீர்வை  பெற்றுக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்  அரசாங்கத்தை  அமைத்தால் மாத்திரமே  இலக்கினை  அடைய முடியும்.

பாராளுமன்றத்தில்  பொதுஜன பெரமுன தனித்து   நிலையான அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.  பிறிதொரு  கட்சியின் ஆதரவுடன் தேசிய அரசாங்கத்தை தோற்றுவித்தால்  நல்லாட்சி அரசாங்கத்தின்  முரண்பாடுகளே   மிகுதியாக அமையும்.    அத்துடன் ஜனாதிபதியை  பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி  அரசாங்கத்தை அமைக்க வேண்டும்

நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி  ஒரு கட்சி சார்ந்தவராகவும், பிரதமர் பிறிதொரு கட்சி  சார்ந்தவராகவும்  இருந்தமையினால்  அரசாங்கத்தின் கொள்கை  முரண்பட்டதாக  இருந்தது. 

 இதனால் முழு  அரச செயலொழுங்கும் பலவீனமடைந்தது.  ஆகவே   இம்முறை ஜனாதிபதியின் பொதுஜன பெரமுன  கட்சி பாராளுமன்றத்தில் நிலையான அரசாங்கத்தை அமைக்க வேண்டியது கட்டாயமாகும்.

ஜனாதிபதி   அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும்  தலைவராகவே  செயற்படுகிறார்.   அரசியல் கட்சிகளை  இலக்காக  கொண்டு அவர் செயற்படவில்லை.   

தமிழ்- முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக  முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை விடுத்து யாதார்த்த நிலைமையினை புரிந்துக் கொண்டு சிறந்த   அரசாங்கத்தை  உருவாக்க  ஒன்றுப்பட வேண்டும் என்பதே     அவரது நிலைப்பாடாக உள்ளது.

இடம் பெறவுள்ள  பொதுத்தேர்தலில்    ஸ்ரீ லங்கா பொதுஜன  பெரமுன  பலமான அரசாங்கத்தை  தோற்றுவிக்கும்  தமிழ்   இ முஸ்லிம் சமூகத்தினர் இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில்   பொதுஜன பெரமுனவின்  மொட்டு  சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.பாராளுமன்றத்தில்   அனைத்து இன மக்களையும்  பிரதிநிதித்தவப்படுத்தும்  அரசாங்கம்   தோற்றம் பெற்றால் மாத்த்ரமே   தேசிய நல்லிணக்கத்தை  கட்டியெழுப்ப முடியும்.   என்றார்.

2 கருத்துரைகள்:

சிறந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சிறந்த ஆட்சியினை கொடுக்க வேண்டும் என பெரும்பான்மைக் கட்சியினர் உள்ளத்தளவில் உண்மையிலேயே விரும்பினால் அவரகள் முதலில் செய்ய வேண்டியது தமது கட்சியில் இருக்கும் தீவிரவாத எண்ணம்கொண்டோரை அப்புறப்படுத்த வேண்டும். முற்போக்கு எண்ணம் கொண்ட வலதுசாரிக்கட்சிகள் தம் கட்சியுடன் இணைந்துள்ள இடதுசாரிகளை முகத்தாட்சண்யம் பாராது நீக்கிவிட வேண்டும். அல்லது முஸ்லிம்களுக்குச் செய்ததுபோல் தேர்தலில் வென்று வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்ற நிபந்தனையில் அவரகளை பின்னர் சேர்த்துக்கொள்ளல் வேண்டும். இடதுசாரிக் கட்சிகளால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. தேவையற்ற அவப்பெயரே வலதுசாரிகளுக்கு கிடைக்கும். அவரகளுக்கு முடியும் என்றால் தனித்து நின்று தேர்தலில் வெல்லட்டும் பார்ப்போம்

முஸ்லிம்கள் 1948ம் ஆண்டிலிருந்து 100% சிங்களக் கட்சிகளுக்குத்தான் வாக்களித்து வருகின்றனர். ஒன்று UNP. அல்லது SLFP/SLPP. அது அவரகளது ஜனநாயக உரிமை. ஆனால் அவரகளுக்குக் கிடைத்தது ஒப்பீட்டளவில் எதுவுமே இல்லை. ஒரு பக்க சிங்ளவரகளுக்கு வாக்களித்தமைக்காக மறுபக்க சிங்களவரகளால் வன்முறையும் இனவாதமும் தொடர்ந்து திணிக்கப்படுவதுதான் மிகுந்த வேதனையாக இருக்கின்றது.

It is said that Tamils ​​and Muslims should be united to form a better government. If the majority party wants to give the Tamils ​​and Muslims a better regime, the first thing they need to do is get rid out of the radical-minded people from their party. Progressive-minded right-wing parties must dismantle their left-aligned factions. Or should they be recruited later on the condition that they will be recruited if they win the election as they did for Muslims. There is nothing to be done by left parties. Unnecessary insults get to the right. Let them stand alone and win the election if they can

Muslims have been voting for 100% Sinhala parties since 1948. One is the UNP. Or SLFP/SLPP. It is their democratic right. But what they got was relatively nothing. On the other hand, it is extremely painful for the Sinhalese to continue to inflict violence and racism on Muslims.

தமிழ் மக்களிடம் இருந்து புலிகள்  வேறுபடுத்தப்பட்டதன் பின்னால் எவ்வாறு யுத்தம் இலகுவாக வெல்லப்பட்டதோ, அதே போன்று இலங்கை மக்களிடம் இருந்து இனவாதிகள் வேறுபடுத்தப்பட்டதின் பின்னாலேயே இலங்கை தனது கலண்டரைத் தொடங்கும்.

இனவாதிகள் வேறுபடுத்தப்பட இலகுவான வழி,  அவர்கள் என்ன உருவில் வந்தாலும், பாராளுமன்றம் முதல் பள்ளிகள் அடங்கலாக  எங்குமே பகிரங்கமாக எதிர்க்கப்படல் வேண்டும்.  அவ்வாறு எதிர்ப்போர் ஓர் தேசியக் கூட்டணியாக பரிணமித்து ஆளும் நாளே இந்நாட்டின் பொன்னாள் ஆகும்.

Post a comment