Header Ads



கொழும்பில் இப்படியும் ஏமாற்றுகிறார்கள் (எச்சரிக்கை - மயிர்க்கூச்செறியும் உண்மை)

அலுவலகம் முடிந்து 03.06.2020 எனது வாகனத்தில் வீடுநோக்கி புறப்பட்டேன்...

இரவு 8.30 மணி...

வோர்ட் பிளேஸ் ஊடாக பெரியாஸ்பத்திரி முன் உள்ள சந்தியில் திரும்பி மருதானை நோக்கி வந்தபோது இடையில் கலர் லைட் அருகே சிறிய சத்தம் கேட்டது.. கண்ணாடியை பார்த்தேன்... ஒன்றுமில்லை... கொஞ்சம் முன்னே வந்தபோது ஒரு ஓட்டோக்காரர் என்னை முந்தியபடி சிங்களத்தில் கத்தியபடி வாகனத்தை ஓரமாக்குமாறு பணித்தார்...

என்ன பிரச்சினை...? என்று கேட்டேன்...

“ஓரமாக நிறுத்துங்கள்... சொல்கிறேன்” என்றார்...

சரியென்று நிறுத்தினேன்...

அருகே வந்தார்... நான் வாகனத்தில் இருந்து இறங்காமல்... என்ன பிரச்சினை என்று கேட்டேன்..
“ நீங்கள் இடது பக்கம் வாகனத்தினை திரும்பியதால் எனது வாகனம் சடாரென திரும்பியது...அதனால் நான் அரும்பொட்டில் தப்பினேன்.. இப்போ வாருங்கள் பொலிஸ் செல்வோம்... உங்களை ரிமாண்ட் பண்ணுவார்கள்...” என்றார்..

கையில் இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது... காலிலும் இரத்தக் காயம் இருப்பதாக சொன்னார்...

சில நிமிடங்களில் மிரட்டும் தொனியில் பேச ஆரம்பித்தார்... காலையில் சாமி கும்பிட்டு நெற்றியில் வைத்த மஞ்சள் குங்குமத்தை பார்த்து சுத்த சைவமான சாந்தமான பேர்வழி என்று நினைத்துவிட்டார் போலும்...

இருந்தாலும் ஒரு விபத்து நடந்திருந்தால் என்ன செய்வது? அதுவும் நம்மையறியாமல்..! என்று நினைத்து சரி வாருங்கள் பொலிசுக்கு செல்வோம் என்றேன்... “ உங்களை ரிமாண்ட் பண்ணுவார்கள்... ஊரடங்கு வேறு இருக்கிறது...பரவாயில்லை உள்ளே இருங்கள்..” என்றார்..

“சரி.. என்று நான் பொலிஸ் நோக்கி புறப்பட அவர் அமைதியாக ஒன்றுமில்லாமல் ஓட்டோவில் அமர்ந்தார்...” நான் கொஞ்ச தூரம் முன்னே வந்து மருதானை பொலிஸ் நிலையத்தின் முன்னால் இருந்த பொலிஸாரிடம் இந்த விடயத்தினை கூறினேன்...

“ நீங்க வீட்டுக்கு போங்க சார்.. இந்த கொஞ்ச நாளா குடு காரனுங்க கைய வெட்டிக்கொண்டு இந்த வியாபாரத்த பண்ணுறானுங்க... அதெல்லாம் ஒரு விபத்தும் கிடையாது.. எதாவது ஒன்றை வாகனத்தில் வீசி சத்தம் வர வைப்பது... பின்னர் மிரட்டுவது...இதுதான் வேலை நீங்கள் போங்க... நாங்க பார்க்கிறோம்..” என்று கூறி என்னை அனுப்பினர்...

மக்களே கவனம்... கொஞ்சம் உலகறிவுள்ள நமக்கே இப்படி ஒரு அச்சுறுத்தல் வந்தபோது சாதாரண நிலையில் உள்ள ஒருவரின் நிலைமை என்ன?

இப்படி என்ன சம்பவம் நடந்தாலும் உடனடியாக பொலிசுக்கே போவோம் என கூறுங்கள்.. ஆயிரம் ரெண்டாயிரம்னு கொடுத்து ஷேப் ஆக நினைக்காதீங்க... நீங்க தவறே செய்திருந்தாலும் பொலிஸுக்கு போய் முறையிடுங்கள்.. நீதி கேளுங்கள்...

அவன் குடுக்காரன் அல்ல... ஜூனியர் நடிகர் திலகம்...

கவனம்...!

Sivarajah Ramasamy மூத்த ஊடக ஆசிரியர்

2 comments:

Powered by Blogger.