Header Ads



கொரோனாவுக்கு புதிய சிகிச்சை - சவுதியுடன் கைகோத்த ரஷ்யா


கரோனாவுக்குப் புதிய சிகிச்சை முறையை ரஷ்யா உருவாக்கியுள்ளது என்றும் விரைவில் சவுதி அரேபியாவுடன் இணைந்து சோதனையில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ரஷ்யா தரப்பில், “நாம் சவுதி அரேபியாவுடன் இணைந்து புதிய சிகிச்சை முறையைக் கண்டறிய உள்ளோம். கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ( Avifavir ) இந்தச் சிகிச்சை முறையைப் பயன்படுத்தும்போது அது நல்ல பலனை அளித்துள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபியாவுடன் பேசி வருகிறோம். சவுதி அரேபியா இந்தப் புதிய சிகிச்சை முறையை இணைத்து சோதனை நடத்த ஆர்வமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் 4,05,843 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,693 பேர் பலியாகியுள்ளனர். சவுதி அரேபியாவில் 85,261 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 503 பேர் பலியாகியுள்ளனர்

1 comment:

  1. ராஜா தந்தரம் ரஷ்யா வேறு நாட்டுக்கு போகலம்தனே

    ReplyDelete

Powered by Blogger.