Header Ads



தேசத்தை மீட்டெடுக்க தோன்றிய யுகபுருஷர் ஜனாதிபதி கோட்டாபய - தம்மானந்த தேரர்


தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி, மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டார். மகாசங்கத்தினருக்காக காலை அன்னதானம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ருவன்வெலி சேயவின் தலைவர் பல்லேகேம ஹேமரத்தன தேரர், அனுராதபுரம் சம்புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி நூகதென்னே பஞ்ஞானந்த தேரர், மிகிந்தளை ரஜமகா விகாரையின் விகாராதிபதி வளவாஹிங்குனவெவே தம்மரத்தன தேரர், அனுராதபுர லங்கா விகாரையின் விகாராதிபதி ரலபனாவே தம்மஜோதி தேரர், நெல்லிக்குளம பங்சஸதிக்க விகாராதிபதி சங்கைக்குரிய அளுத்கம போகமுவே சத்தாரங்சி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பெசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (19) மாலை அபயகிரி பூர்வாராம மகா விகாரையில் வழிபட்டு, விகாராதிபதி வடமத்திய மாகாண சங்க நாயக்க சங்கைக்குரிய பொத்தானே தம்மானந்த தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். 

தீவிரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், கொவிட் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றியதற்கு தம்மானந்த தேரர் தமது பாராட்டுக்களை தெரிவித்தார். 

தேசத்தை மீட்டெடுக்க தோன்றிய யுகபுருஷராக ஜனாதிபதி அவர்கள் முன்னெடுக்கின்ற செயற்பாடுகளுக்கு மகாசங்கத்தினரின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்குமென தேரர் அவர்கள் குறிப்பிட்டார். 

விகாரையில் சேதமடைந்த கட்டிடத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கும், 40 வருடங்களுக்கு முன்னர் நஷ்ட ஈடு வழங்கப்படாமல் கைப்பற்றப்பட்ட நிலம் தொடர்பாகவும் தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 

மேலும் குட்டம்பொக்குன விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், விகாராதிபதி சங்கைக்குரிய இஹலகம பவரகித்தி தேரர் அவர்களை சந்தித்து சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இதன்போது விகாரைக்கு வருகை தந்திருந்த பக்தர்களுடனும் ஜனாதிபதி அவர்கள் சுமூகமாக கலந்துரையாடினார். 


மொஹான் கருணாரத்ன
பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.06.20

No comments

Powered by Blogger.