Header Ads



தமிழர்களும், முஸ்லிம்களும் மொட்டுக்கு வாக்களிக்க அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது - கம்மன்பில

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்குப் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்கவில்லை என்பது உண்மை. சிங்கள மக்கள் அள்ளி வழங்கிய வாக்குகளில்தான் கோட்டாபய ராஜபக்ச அமோக வெற்றியடைந்தார். எனவே, ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் விட வேண்டாம் என தமிழ், முஸ்லிம் மக்களிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பௌத்த - சிங்கள மக்களின் முழு ஆதரவுடன்தான் ஜனாதிபதிக் கதிரையில் கோட்டாபய ராஜபக்ச அமர்ந்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம்களின் வாக்குகள் 'தாமரை மொட்டு' சின்னத்துக்கு அளிக்கப்படக்கூடாது என்பதிலும், அந்த வாக்குகள் 'அன்னம்' சின்னத்துக்கே அளிக்கப்பட வேண்டும் என்பதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிரதான முஸ்லிம் கட்சிகளும் விடாப்பிடியாக நின்றன.

இறுதியில் அந்தக் கட்சிகள் தாம் நினைத்தை சாதித்தன. ஆனால், 'அன்னம்' சின்னத்துக்கு வாக்களித்து சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்க முயன்ற தமிழ், முஸ்லிம்கள் இறுதியில் ஏமாற்றமே அடைந்தனர்.

எனவே, தமிழ், முஸ்லிம் மக்கள் இந்தப் பொதுத்தேர்தலில் சிங்கள மக்களுடன் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 'மொட்டு' சின்னத்துக்கு வாக்களிக்க அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ், முஸ்லிம் மக்கள் சரிவரப் பயன்படுத்த வேண்டும்.

ராஜபக்சக்களின் இந்த ஆட்சியில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எந்தவிதப் பாதிப்பு ஏற்படாத வகையில் நாம் செயற்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. தமிழர்களைப்பொறுத்து அம்பாறை மாவட்டத்துக்குவெளியே மொட்டு மலரும் வாய்ப்பில்லை.முஸ்லிம்களும் தங்கள் பிரதிநிதித்துவத்தை தக்க வைக்கும் அடிப்படையிலேயே வாக்களிக்கவேண்டும்.

    ReplyDelete
  2. தமிழ் முஸ்லிம்களின் வாக்குகள் தேவையில்லை என கும்மாளமடித்த இவர் இப்போது தமிழ் முஸ்லிம்களின் வாக்குப்பிச்சை கேட்கிறான். முன்பு இந்த இரு சிறுபான்மை இனத்தவர்களினதும வாக்குகள் இன்றி அரசாங்கம் அமைத்தது போன்று அந்த இரண்டு உருண்டை பெரும்பான்மைகளையும் பெற்றுக் கொள்ளலாம் தானே.

    ReplyDelete

Powered by Blogger.