Header Ads



சிங்களவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வதன் மூலமே, முஸ்லிம்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், பொதுஜன பெரமுன அதிகளவு ஆசனங்களை பெற்று வெற்றியை தனதாக்கும். களுத்துறை மாவட்டத்தையும் நாம் கைப்பற்றுவோம். எனவே இதன் பங்காளர்களாக முஸ்லிம்களும் இணைந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு பொஜன பெரமுனவின் தேசியப் பட்டியலில் இடம்பிடித்துள்ள, மர்ஜான் பளீல் ஹாஜியார் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

களுத்துறை மாவட்டத்தில் அதிகளவு முஸ்லிம்கள் உள்ளனர். அவர்கள் சிந்தித்து வாக்களிக்க முன்வர வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாக பிரிந்துள்ளன. ஜே.வி.பி.யையும் ஒருதொகை  முஸ்லிம்கள் ஆதரவளிப்பர்.

எனவே இம்முறை முஸ்லிம் வாக்குகள், சிதறுண்டு போகும். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும் முஸ்லிம்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இவற்றையெல்லாம் நோக்குகையில், களுத்துறையில் இருந்து இம்முறை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்படுவது சாத்தியங்கள் குறைந்த ஒன்றாகும்.

எனவே முஸ்லிம்கள் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்து, நாமும் ஆட்சியின் பங்காளர்களாக மாற வேண்டும்.

அவ்வாறே களுத்துறை மாவட்டத்தையும் பொதுஜன பெரமுன, வெற்றிகொள்ள முஸ்லிம்கள் உதவ வேண்டும்.

களுத்துறை  மாவட்ட முஸ்லிம்கள் தமது விருப்பு வாக்குகளை இம்முறை பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் ரோஹித்த அபயகுணவர்த்தனா, பியல் நிசாந்த மற்றும் விதுர விக்கிரமநாயக்கா ஆகியோருக்கு வாக்களித்து அவர்களை அதிகப்படியான வாக்குகளினால் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேசி முஸ்லிம்களின் தேசிய விவகாரங்களையும், களுத்துறை மாவட்டத்திலும், பேருவளைத் தொகுதியிலும் உள்ள முஸ்லிம்களின் விவகாரங்களையும் இதன்மூலம் இலகுவாக கையாள முடியும்.

இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்கள், பெரும்பான்மையாக உள்ள  சிங்களவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வதன் மூலமே, சர்ச்சைகளையும், சிக்கல்களையும் தீர்த்துக்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். அந்தவகையில் முஸ்லிம்களாகிய நாம் ஒற்றுமையுடன் செயற்படுவது இன்றைய காலத்தில் பிரதான தேவையாக உள்ளது என்றார்.

1 comment:

  1. "சிங்களவரகளுடன் ஒற்றுமையாக வாழ்வதன்மூலமே (முஸ்லிம்கள்) முஸலிம்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும்." சிறப்பான தலைப்பு. 04-02-1947லிருந்து இந் நாட்டின் முஸ்லிம் மக்கள் வரிந்து கட்டிக் கொண்டு சிங்கள கட்சியினருக்கு மாத்திரம்தான் 99% த்திற்கும் மேல் வாக்களித்து வருகின்றனர். வாக்களிக்fg; போகின்றனர். அதனால் இதுவரை முஸ்லிம்கள் கண்ட பலன் என்ன. இதனை சொல்வது யார் என்று பார்த்தால் மர்ஜான் பளீல் ஹாஜியார். முதலில் நான் சொல்வது சரியா பிழையா என்று பாருங்கள். இந்தத் தேர்தலில் மாத்திரமல்ல உலகம் முடியும் வரை இலங்கையில் நடைபெறப்போகும் சகல தேர்தல்கள் அனைத்திலும் இலங்கை முஸ்லிம்கள் சிங்களவரகளுக்குத்தான் வாக்களிக்கப் போகின்றார்கள். முதலில் மர்ஜான் ஹாஜியார் அவரகள் மிக அண்மைக்காலங்களில் சிங்களவரகளால் முஸ்லிம்கள்மீது நடாத்தப்பட்ட அடாவடித்தனமான அநீதிகளை நிறுத்தி முஸ்லிம் சமூகத்திற்கு சேவை செய்ய முடியுமா என்று பாருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.