Header Ads



பொரளை ஜும்மா மஸ்ஜித் நிர்வாகம், இதனை கவனத்திற் கொள்ளுமா...?

பொரளை ஜும்மா மஸ்ஜித், #கொழும்பு லேடி றிட்ஜ்வே #சிறுவர் வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைந்திருப்பதனால் நாளாந்தம் தூர பிரதேசங்களில் இருந்து வைத்தியசாலைக்கு வருவோருக்கு பேருதவியாக இருந்து வருகிறது.

வைத்தியசாலையில் தங்கி #சிகிச்சை பெற்று வருகின்ற பிள்ளைகளின் #பெற்றோர்கள் மற்றும் தூரப் பிரதேசங்களிலிருந்து நாளாந்தம் #கிளினிக் வருபவர்கள் என வைத்தியசாலையை நாடிவரும் பலதரப்பினரும் தங்களுடைய ஆன்மீக தேவைகளுக்கு மேலதிகமாக மன உளைச்சலாலும் வைத்தியசாலைகளில் அலைந்து திரிந்த களைப்பினாலும் இளைப்பாறுவதற்கும், மலசலகூட தேவைகளுக்காகவும் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள இப்பள்ளியையே நாடுகின்றனர். இது பிள்ளைகளின் நோயினால் சோர்வடைந்து போயுள்ள பெற்றோருக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. மேலும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் தூரப் பிரதேசங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் பள்ளிவாசலில் இரவில் தங்குவதற்கான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக #கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த #பள்ளிவாசல்கள் அரசின் பல இறுக்கமான நிபந்தனைகளோடு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

எல்லா பள்ளிவாசல்களையும் போன்று பொரளை ஜும்மா பள்ளிவாசலும் அரச நிபந்தனைகளுக்கு மதிப்பளித்து #தொழுகை நேரங்களில் மாத்திரம் திறக்கப்படுகின்றது. இவ்வாறு திறக்கப்பட்ட போதும் #மலசலகூடங்கள் பூட்டப்பட்டே உள்ளன. இதன் காரணமாக வைத்தியசாலைக்கு தூர பிரதேசங்களில் இருந்து வருகின்ற ஆண்கள், பெண்கள் என சகலரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். மேலும் இளைப்பாறுவதற்கு கூட ஒரு இடமில்லாமல் வீதிகளில் ஆங்காங்கே உட்கார்ந்து இருக்கின்ற அவல நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

ஏனைய பள்ளிவாசல்களை போலல்லாது வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள இப்பள்ளிவாசல்கள் தூர தேசங்களில் இருந்து வருபவர்களின் நன்மை கருதி சில தளர்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. இது தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் #வக்பு சபை ஆகியன மறுபரிசீலனை செய்தால் பயனுள்ளதாக அமையும்.

கொழும்பில் உள்ள பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், ரயில்கள், வைத்தியசாலைகள் சொப்பிங் மோல்கள் என எல்லா பொது இடங்களிலும் மலசலகூடங்கள் அனைவரது பயன்பாட்டிற்கும் திறக்கப்பட்டுள்ள அதேநேரம் பள்ளிவாசல்களில் மட்டும் மூடப்பட்டு இருப்பது ஏனோ?

Roomy Haris

No comments

Powered by Blogger.