Header Ads



ஓமானுக்கான தூதுவர் அமீர் அஜ்வத்தின் முயற்ச்சியால், முதன்முதலாக இலங்கையிலிருந்து கோழி இறைச்சி ஏற்றுமதி


(மனாஸ் ஹுசைன்)

இலங்கையின் கோழிப்பண்ணை உற்பத்திகளின் ஏற்றுமதியை முதன் முதலாக ஓமான் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத் ஆரம்பித்து வைத்துள்ளார். 

இலங்கையின் ஃபார்ம்ஸ் பிரைட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் ஏற்றுமதி செய்யப்பட்ட இலங்கையின் குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சியின் முதல் 30 மெட்ரிக் டொன் சரக்குகளை ஓமானின் மிகப்பெரிய குளிரூட்டப்பட்ட இறைச்சி இறக்குமதியாளர்களில் ஒன்றான அல் ஹமாடி டிரேடிங் அன்ட் கொன்ட். எல்.எல்.சி. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஃப்ளின் எம்.வி. டி லிமா அவர்களிடம் கையளிக்கும் வைபவத்தில் கருத்துத் தெரிவித்தபோது ‘வளைகுடா பிராந்தியத்தில் முதன் முறையாக இலங்கையின் புதிய ஏற்றுமதித் தயாரிப்பொன்றுக்கு புதிய சந்தை வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய திருப்புமுனையாகும்’ என ஓமான் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் தெரிவித்தார்.

‘இலங்கையின் உணவுப் பொருட்களுக்கு இப் பிராந்தியத்தியில் பெருமளவிலான எதிர்பார்ப்புக்கள் இருப்பதுடன், இந்த முயற்சி இலங்கையின் கோழிப்பண்ணை உற்பத்திப் பொருட்களை இந்தப் பிராந்தியத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான புதியதொரு அத்தியாயத்தைத் திறந்து வைத்துள்ளது’ என திரு. ஃப்ளின் எம்.வி. டி லிமா தெரிவித்தார். 

இலங்கையின் இறைச்சி உற்பத்தி வளைகுடா நாடுகளின் சந்தையில் வணிக ரீதியாக இவ்வளவு பெரிய அளவில் உள்நுழைவது வரலாற்றில் இதுவே முதலாவது தடவையாகும். 

இலங்கை கோழிப்பண்ணை உற்பத்திப் பொருட்களை முதன்முறையாக ஓமானுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான அனுமதி உரிமத்தை வழங்கியமைக்காக தூதுவர் அமீர் அஜ்வத் ஓமான் நாட்டின் விவசாய மற்றும் மீன்வள அமைச்சிற்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். 

கோவிட்-19 தொற்றுநோய் சவால்களுக்கு மத்தியிலும் இந்த முயற்சியை வெற்றிகரமாக்குவதற்கான அயராத முயற்சிகளை மேற்கொண்ட இலங்கை ஃபார்ம்ஸ் பிரைட் லிமிடெட் (கிறிஸ்போ) மற்றும் ஓமான் நாட்டின் அல் ஹமாடி டிரேடிங் அன்ட் கொன்ட். எல்.எல்.சி. ஆகிய நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களுக்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

2 comments:

  1. ஒரு உற்பத்தியை ஏற்றுமதி செய்து விட்டு குருக்குக் கோழி போல் சத்தமிடாது இன்னும் பல இலங்கை ஏற்றமதிகளை ஓமானில் சந்தைப்படுத்த இலங்கைத்தூதுவர் நடவடிக்ைக எடுக்க வேண்டும். கடந்த ஆண்டுகளாக கட​மையாற்றிய எந்த ஒரு இலங்கைத் தூதுவரும் இது போன்ற முயற்சிகள் எடுக்கவிலலை. கிடைக்கும் சொகுசுகளையும் அரசாங்கம் வழங்கும் சலுகைகளை முழுமையாகப் பயன்படுத்து சொகுசு வாழ்க்கை நடாத்தி மூன்று வருடங்களின் பின் திரும்பிவந்தது தான் மிச்சம். எனவே தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் இலங்கையின் உள்நாட்டு உற்பத்திகள், குறிப்பாக கைப்பணிப் பொருட்கள்,ஆடைவகை,கைத்தரித்துணிகள் உற்பட பல்வேறுவகையான கைப்பணிப் பொருட்களும் மாணிக்கக்கல் போன்ற பல உள்நாட்டுப் பொருட்களை தாராளமாக ஓமானில் சந்தைப்படுத்தலாம். கோவிட் 19 பிறகு பாதிக்கப்பட்ட பொருளாதார இழப்புகளை ஈடு செய்ய அவர் மும்முரமாக ஈடுபட வேண்டும்.

    ReplyDelete
  2. To export poultry products to Oman, halal accreditation is must no?

    ReplyDelete

Powered by Blogger.