Header Ads



புதிய கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக சஜித்தை பெயரிட தீர்மானித்தபோதும் வேறு ஒரு கட்சியை அமைக்க அனுமதிக்கவில்லை

ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்த முறைப்பாட்டை நிராகரிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இன்று -12- கொழும்பு மேல் நீதிமன்றில் மனு ஒன்றின் மூலம் கோரியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டமைக்கு எதிராக, ரஞ்சித் மத்தும பண்டார குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அதற்கு ஆட்சேபனை தெரிவித்து மனுத்தாக்கல் செய்துள்ள அகிலவிராஜ் காரியவசம், முறைப்பாட்டாளர் உண்மையான தகவல்களை மறைத்து, தூய எண்ணமின்றி முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

புதிய கூட்டணியில் பொதுத் தேர்தலில் போட்டியிடவும், பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை பெயரிடவும் தமது கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளபோதும், வேறு ஒரு கட்சியை அமைப்பதற்கு, ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட எவருக்கும் அனுமதி வழங்கவில்லை என அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.