Header Ads



அரசியல்வாதிகளால் புலிகளிற்கு வழங்கப்பட்ட ஆயுதங்களினால், எங்கள் படைவீரர்களே கொல்லப்பட்டார்கள் - மகிந்த

கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனின் வரலாறு ஒன்றும இரகசியமான விடயமல்ல என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குளியாபிட்டியில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கருணா இராணுவத்தினரை கொலை செய்ததாக தெரிவித்துள்ளமை எதிர்கட்சிகளின் அரசியல் அரங்கில் மிகவும் முக்கியமான விடயமாக மாறியுள்ளது எனபிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும் விடுதலைப்புலிகளிற்கு ஆயுதங்களை கொள்வனவுசெய்து வழங்கியவர்கள் குறித்து எவரும் குரல் எழுப்பவில்லை என தெரிவித்துள்ள பிரதமர், அரசியல்வாதிகளால் கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளிற்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மூலம் எங்கள் படைவீரர்களே கொல்லப்பட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

கருணாவின் வரலாறு ஒன்றும் இரகசியமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோல்விகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள தெரியாதவர் நாட்டிற்கு தலைமை தாங்குவதற்கு பொருத்தமற்றவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தலைவர் என்பவர் எவ்வளவு மோசமான நிலைமையையும் எதிர்கொள்வதற்கான ஆளுமையை கொண்டிருக்கவேண்டும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.