Header Ads



நிந்தவூர் பொறுத்தவரையில் ஒரு எம்.பியை உருவாக்குவதற்கான வாக்குப் பலம் இருக்கிறது

தேசியக் காங்கிரஸின் தேர்தல் காரியாலயத் திறப்பு விழாவும், முதலாவது அரசியல் பிரச்சாரக் கூட்டமும் நேற்று நிந்தவூரில் இடம் பெற்றது. 

தேசியக் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச அமைப்பாளர் இஸட்.எம். முனீர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் தேசியக் காங்கிரஸின் தேசியத் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

திகாமடுல்ல மாவட்ட தேர்தல் வேட்பாளர்களான சட்டத்தரணி.மர்சூம் மௌலானா, சட்டத்தரணி.கே.எல்.சமீம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

தேசியக் காங்கிரஸின் தேசியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 

'நிந்தவூர் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு எம்.பியை உருவாக்குவதற்கான வாக்குப் பலம் இருக்கிறது. அவர்கள் விரும்பும் எந்தக் கட்சியிலும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து வாக்களிப்பதன் மூலம் எம்.பியை உருவாக்கலாம். அதற்காக இன்றைய சூழ்நிலையில் டெலிபோனுக்கு வாக்களிப்பது பற்றிப் பேச முடியுமா? டெலிபோன் யார்? அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? அவர்களுக்கு நாடு தொடர்பாகத் தெரியுமா? சஜித் பிரேமதாசாவிற்கு நாடு தொடர்பாகத் தெரியுமா? இந்த நாட்டில் இடம் பெற்ற எவ்வளவோ பிரச்சினைகளில் சஜித் பிரேமதாசாவிற்கு இன்று வரை ஏதாவது ஒன்று பற்றித் தெரியுமா? அவர் மற்றவர்களால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு, வேறு வழியில்லாமல் ரணிலை விட்டு விட்டு இங்கே வருகிறார். ஆகவே டெலிபோண் பற்றிப் பேசுவதோ, முஸ்லீம் காங்கிரஸ் பற்றிப் பேசுவதோ இலங்கை மண்ணில், அல்லது கிழக்கு மண்ணில் சாத்தியமில்லை! எனவே எமது தேசியக் காங்கிரஸ் வேட்பாளர்களின் கரங்களைப் பலப்படுத்தி, அவர்களையும் பாராளுமன்றம் கூட்டிச் செல்ல அனுமதி தருவீர்களேயானால் அதுவே நமது சமூகத்தின் வெற்றிக்கு வித்திடும்' எனத் தெரிவித்தார்.

றாசிக் நபாயிஸ்

1 comment:

  1. you are doing oppurtunity politics betraying the party SLMC. Once you were nominated and elected through SLMC but now you have come to spilt the Muslims votes on behalf of racist power as an agent. You never explained why you were not given nomination through SLPP because you can not win through preferntial votes over Sinhalese candidates.

    ReplyDelete

Powered by Blogger.