Header Ads



வடக்குகிழக்கு தமிழ் முஸ்லீம் சொந்தமில்லை என, ஞானசாரதேரர் கூறியதற்கு மன்னிப்பு கேட்கின்றேன்

-கனகராசா சரவணன்-

“வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லீம் மக்களுக்கு சொந்தம் இல்லை. என ஞானசாரதேரர் தெரிவித்த கருத்துக்கு நான் தேரர் என்ற வகையில் எதிர்ப்பு தெரிவித்துக் கொள்கின்றேன். மன்னிப்பு கேட்கின்றேன்” என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதியும் சுயேசட்சைக் குழுவில் போட்டியிடும்; வேட்பாளருமான அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஞானசாரதேரர் தெரிவித்த கருத்து தொடர்பாக தமிழ் பெற்றோர்கள் பிள்ளைகளும் மனம் பாதிப்படைந்துள்ளனர். எனவே நான் தேரர் என்ற முறையில் மன்னிப்பு கேட்கின்றேன். அதேவேளை ஞானசாரதேரர் மற்றும் சில தோர்கள் சில சந்தர்ப்பங்களில் சில விடயங்களை வெளிப்படுத்தும் போது எங்கள் நாட்டில் வாழுகின்ற மக்களை கருத்தில் கொண்டு கருத்து தெரிவிப்பதில் குறைபாடுகள் காணப்படுகின்றது.

தமிழர்கள் அவர்களது பிரதேசங்களில் தங்களது அடையளங்களை பாதுகாத்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற இம் மக்களுக்கு இவ்வாறான கதையைக் கேட்கும்போது தங்களது சந்ததியினருக்கு எதிர்கால் என்ன நடக்குமே என்ற சந்தேகம் ஏற்பட்டதுடன் மீண்டும். மதவா, இனவாத, வைராக்கியம் குரோதங்கள் ஏற்பட வழிவகுக்கும்.

நான் தேர்தலில் முன்னிப்பது இனவாத, மதவாதத்தை கிளர்ச்சியடையச் செய்வதற்கல்ல. இந்த அப்பாவி மக்களை நிர்க்கதியாக்கும் எண்ணம் எனக்கில்லை. மக்களின் எதிர்கால சுபீட்சத்துக்கு என்ன செய்ய முடியும் இந்த நாட்டில் தயாரிக்கப்படும் கொள்கையின் அடிப்படையில் அந்த வேலைத்திட்டங்களுக்கு உதவிவழங்கி அடிமட்டத்திலிருந்து அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குவதே இன்று அரசியலில் தேவையாகவுள்ளது.

1 comment:

Powered by Blogger.