Header Ads



இன்றுதான் உண்மையான பெருநாள் - இலங்கை முஸ்லிம்கள் பூரிப்பு


இன்றோடு 14 ஜும்ஆக்களைக் கடந்த நிலையில், சுமார் 100 நாட்கள்   மஸ்ஜிதை விட்டும் தூரமான துயரத்துடன்,   இன்று 12.06.2020 முதல் ஸுபஹ் தொழுகையினை அல்லாஹ்வின் மாளிகையில்  தனியாக நிறைவேற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை அந்த ரப்பு தந்திருக்கிறான்.

பெருமைக்காக சொல்லவில்லை.

உண்மையில் இன்றைய  தினம்,  பெருநாள் என்ற பூரிப்பு மனதினை ஆட்கொண்டு விட்டது.

நோன்புப் பெருநாள் ஆடையினை அணிந்து, புது மணம் பூசி புது மணமகனாக  மஸ்ஜித் செல்ல மனம் வேட்கை  கொண்டுள்ளது. 

முன் ஸப்பில் இடம்பிடித்து, முழு நன்மையையும் சுவீகரிக்க உள்ளம் உறுதி பூண்டு விட்டது.

மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் வாப்பாவின் கப்ர்க்கு சென்று அவருக்கு ஸலாம் சொல்லி யாஸீன் ஓதி துஆச் செய்ய பெரும் சந்தர்ப்பம் கிடைத்தது விட்டது.

முஆத்தினாரே....  பஜ்ர் அதானில்   الصلاة خير من النوم....  அஸ்ஸலாத்து ஹைரும்மினன் நௌம் என்று  நீங்கள் சொல்லத் தேவையில்.

ஏனெனில் நாம் இன்னும் தூங்கவில்லை.

வழமையாகச் சொன்ன صلوا في بيوتكم... ஸல்லு fபீ புயூத்திகும் என்பதனை மறந்தும் சொல்லி விடாதீர்கள்.

அந்த வேதனை இன்றோடு நிறைவு பெறட்டும்.

கண்கள் இரண்டும் குருடான ஸஹாபிக்கு, காதில் அதான் விழுந்தால்   மஸ்ஜிதுக்கு வருவது கடமை என்ற நபிகளாரின் போதனையை மௌத்து வரைக்கும் நாம்  நடைமுறைப்படுத்த  உறுதிபூண்டு விட்டொம்.

S.L.M. இம்தியாஸ் 


1 comment:

  1. இம்தியாஸ் அவர்களே குருடருக்க சொன்ன நபிமொழியை நன்கு அறிந்து வைத்திருக்கிறீர்கள்,கப்ரில் யாசீன் ஓதுவதும் நபிவழிதானா என தேடிப்பார்கலாமே!

    ReplyDelete

Powered by Blogger.